Header Ads



சப்பாத்து வாங்க வசதியற்ற மாணவிக்கு ஆசிரியை வழங்கிய கொடூர தண்டனை..!

(Tm) சப்பாத்து வாங்க வசதியின்றி செருப்பை அணிந்து பாடசாலைக்குச் சென்ற மாணவியொருவரை தண்டிப்பதாகக் கூறி, செருப்பை மாலையாக்கி அம்மாணவிக்கு ஆசிரியையொருவர் அணிவித்த சம்பவமொன்று திருகோணமலை, சேருநுவர பிரதேச பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்த சேருநுவர பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.பீ.வீரரத்ன, பாதிக்கப்பட்ட மாணவிக்கு தனது சொந்த செலவில் சப்பாது வாங்கிக் கொடுத்துள்ளார். 

தந்தையை இழந்த நிலையில் தாயுடன் வாழ்ந்து வந்துள்ள மேற்படி மாணவி, தன்னிடம் சப்பாத்து இல்லாத காரணத்தால் செருப்பை அணிந்து பாடசாலைக்குச் சென்றுள்ளார். 

மேற்படி மாணவி செருப்பு அணிந்து வந்துள்ளதை அவதானித்துள்ள குறித்த பாடசாலையின் ஒழுக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவுள்ள ஆசிரியை, அம்மாணவியை தண்டிக்கும் முகமாக செருப்பை மாலையாக்கி அம்மாணவியின் கழுத்தில் அணிவித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் அறிந்த சேருநுவர பொலிஸார், அப்பாடசாலைக்குச் சென்று அதிபரிடம் விசாரித்துள்ளனர். பாடசாலையின் ஒழுக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஆசிரியையே இவ்வாறு செய்துள்ளார் என அதிபர் கூறியுள்ளார். 

இதனையடுத்து, பொலிஸ் பொறுப்பதிகாரியின் சொந்த செலவில் அம்மாணவிக்கு புதிய சப்பாத்து வாங்கிக்கொடுக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், மாணவியின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இப்பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் குறிப்பிட்டார். 

6 comments:

  1. என்ன குற்றம் செய்தாலும் செருப்பை மாலையாக போடும் மனப்பாங்கு ஆசிரியர்களுக்கு வராது. அது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது காட்டு மிராண்டித்தனம். ஆசிரையுடைய குடும்ப நாகரீகத்தை பாடசாலைக்கு கொண்டு வந்து கலக்காமல் பாடசாலைகளுக்கென்றுள்ள நடைமுறைகளை தெரிந்த ஆசிரியர்களை நியமிப்பது சிறந்தது. அத்துடன் வசதியற்ற மாணவி என்றுதானே குறிப்பிட்டுள்ளார்கள்.

    ஒரு மாணவிக்கு செருப்பை மாலையாக அணிவிப்பது ஒழுக்காற்று நடவடிக்கை என்று யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற காட்டு மிராண்டிகளை தண்டிக்க பட வேண்டும். இதனால் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது.

    ஒழுக்கமற்ற குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கவே ஆசிரயர்கள், ஆசிரியைகள். தண்டிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை. தண்டனையே அவர்களை பாதிக்கின்றன. அதனால் அவர்கள் வெறுப்படைகின்றனர். இவைகளை சில ஆசான்கள் நன்கு உணரவேண்டும்.
    அதுபோது நிறைய ஆசிரியர்கள், ஆசிரியைகள் தமது பணியை திறம்பட தியாகமாக செய்கின்றாரகள் அவர்களை நாம் ஒருபோதும் மற்ந்து விடக்கூடாது. அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  2. that teacher better for Animal not for student

    ReplyDelete
  3. ரனீஸ் கூறியது நல்ல விடயங்கள்.
    போலி ஆசிரியர்களின் வரவால்தான் இப்படியான கேவலாமான நிகழ்வுகள் சமுகத்தில் உள்ளது. இப்படிப்பட்ட ஆசிரியர்கள் நிச்சயம் ஆள்மாராட்டம் செய்தே பரீட்சைகளில் சித்தியடைந்து பணத்திற்காக புனிதமான தொழிலுக்கு வந்திருப்பர். எத்தனையோ போலி ஆசிரியர்களை நாங்களும் பார்ஹ்திருக்கிரோம்,அப்படிப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் நாங்கள் சொல்லுவது என்னவெனில், பணத்திற்காக இந்த தொழிலை செய்வதை விட இலாபம் கூடிய விலைமாது தொழில்களும் உண்டு,பேசாமல் அங்கு போய் சேருங்கள்,உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் வசதியுடன் கிடைக்கும்.

    இந்த பிரச்சினக்கு எதிராக குறிப்பிடப்பட்ட ஆசிரியருக்கு எதிராக வழக்கு தாக்கல் ச்எய்திருக்கலாம்,இதில் மாணவி ஒன்றும் பாதிக்கப்படப்போவதில்லை,அல்லது குறைந்த பட்சம்,பகிரங்கமாக பள்ளி வலாகத்தில் அல்லது நீதிமன்றில் மாணவியிடம் அந்த ஆசிரியர் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.

    குழந்தைகளின் மனதை,வசதியை,நிலமையை அவதானிப்பதே கற்றலுக்கான முன்னெடுப்பின் நவீன தத்துவம்.எல்லாவற்றையும் இவர்கள் வெறும் புத்தகங்களாக மட்டும் படித்திருப்பார்கள்,பயிற்சி பட்டரைகளில் கலந்திருப்பார்கள்,ஆனால் எதுவும் செயலிலில்லை.

    திருந்துங்கள்,உங்களைப்போல பங்கசு பிடித்தவர்கள் பல தொழில்களிலும் இலங்கையில் உள்ளார்கள்,அப்பப்போது அவர்களையும் சந்திப்போம். நன்றி.ஜப்னா.

    ReplyDelete
  4. ஆசிரியர் பயிற்சி கலாசாலை, பல்கலைகழகங்களில் ஒழுக்க சீர்கேட்டின் உச்சக்கட்டம்தான் பகடி வதை. இந்த ஆசிரியையும் அவ்வாறான் பகடி வதைக்கு உள்ளாக்கப்பட்டு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு அனுபவப்பட்டிருக்கலாம், இதனை இவருக்குப் பின் வந்தவர்களுக்கு இவரால் செய்யமுடியாமல் போயிருக்கலாம். அதனை யாருக்காவது செய்து பார்க ஆசைப்பட்டிருப்பார். இப்போது அதனை நிறைவேற்றியிருப்பார் போலும்.

    ReplyDelete
  5. குறித்த ஆசிரியை போன்றவர்கள் வெறுமனே இடம் மாற்றம் பெருவதால், பாதிக்கப்பட்ட மாணவியின் நொந்த உள்ளத்துக்கு மருந்தளித்திட முடியுமா??? சரியானதையும் பிழையானதையும் முறையாகவும் பண்பாடாகவும் கையாளத் தெரியாத இப்படியான ஆசிரிய, ஆசிரியையகள் எந்த அடிப்படையில் ஒழுக்கத்துக்கு பொறுப்பான ஆசான்களாக நியமிக்கப்படுகின்றார்கள்… குறித்த ஆசிரியை பொதுமக்கள் முன்னிலையில் அம்மாணவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுதான் ஒரளவாவது நியாயத்தை வழங்கம். இடமாற்றங்கள் பிரச்சினைகளுக்கும் பெரும் தவறுகளுக்கும் தீர்வாக அமையமாட்டாது…ஏனெனில் குறிப்பிட்ட நாட்கள் அல்லது மாதங்களுக்குப் பின் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி திரும்ப மாற்றலை பெற்றுக்கொள்வார்கள்!!!! மிகவும் விசனத்துக்குறிய செயலை அல்லவா பொறுப்பானவர்கள் செய்கிறார்கள்!!! மரத்தால் விழுந்தவரை மாடு மிதிப்பது போலல்லவா தந்தையை இழந்து தவிக்கின்ற உள்ளங்களை இன்னும் நோகடிக்கின்றார்களே! பொறுப்பானவர்கள் இப்படி அசிங்கமாக கொடுரமாக நடந்துகொள்வதால்தான் வன்முறைகள் தோற்றம் பெறுகின்றது….!!!

    ReplyDelete
  6. மற்றவர்களுடைய மனதை புண்படுத்தாமல் எப்படி நடக்க வேண்டும் என்றுகூட தெரியாத காட்டுமிராண்டிகளை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும்.

    இந்த இலட்சணத்தில் இவர் ஒரு பாடசாலையின் ஒழுக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஆசிரியை?

    இப்படிப்பட்டவர்களை இப்பதவியில் வைக்கும் போது எப்படி இப்பாடசாலை உருப்படப் போகின்றது?...

    மாணவர்கள் எப்படி ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளப் போகின்றார்கள்.!..

    ReplyDelete

Powered by Blogger.