உலக கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்ற வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம் - டெரன் சமி
(Nf) உலக கிண்ண இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்ற வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம் என மேற்கிந்திய தீவுகள் அணியின் டெரன் சமி தெரிவித்துள்ளார்.
மிர்பூரில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி மேந்கிந்திய தீவுகளுடனான போட்டியில் 27 ஓட்டங்களால் டக்வர்த் லூவிஸ் முறையில் வெற்றியீட்டியது.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே டெரன் சமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இம்முறை உலக கிண்ண இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடருடன் இருபதுக்கு 20 போட்டிளிலிருந்து விலகுவதற்கு இலங்கையின் மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.
கிரிக்கெட்டிற்காகவும் தமது அணிக்காகவும் பெரும் பங்களிப்பை வழங்கிய இவர்கள் இருவரும் பெரும் வெற்றியுடனேயே இதிலிருந்து விடை பெற வேண்டுமென்பது மழைக் கடவுளின் விருப்பமாக உள்ளது என சமி தெரிவித்துள்ளார்.
இதனாலேயே நேற்று மழை பெய்ததுடன் அது இலங்கைக்கு சாதகமாக அமைந்ததெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொடரில் தோல்வியைத் தழுவிய போதிலும் அடுத்த ஆண்டுக்கான உலக இருபதுக்கு- 20 போட்டிகளில் பிரகாசிப்பதற்கு இப்போதே தயாராகவுள்ளதாகவும் சமி தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment