அமைச்சரை எச்சரித்த ஜனாதிபதி..!
(Tm) நீர்ப்பாசனத்துறை அமைச்சர் நிமல் சிறி பாலடி சில்வாவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின் போது நிந்தித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
நடந்துமுடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்குகள் குறைந்தமைக்கான காரணத்தை அமைச்சர் நிமல் சிறி பாலடி சில்வா தெரிவிக்கும் போது , பாரிய அபிவிருத்தி திட்டங்கள், வாக்குகளை சேகரிப்பதற்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த கூற்றுதொடர்பிலேயே ஜனாதிபதி, அமைச்சரை நிந்தித்ததாகவும் இனிமேல் இவ்வாறான கூற்றுக்களை வெளியிடவேண்டாம் என்றும் ஜனாதிபதி கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆக மொத்ததில் பலரும் முறுகல் நிலையிலேயே உள்ளனர், உண்மை தெரிந்துவிட்டது இருந்தும் என்னவோ என்று ஓடிக்கொண்டிருக்கின்றது. இனி ஒவ்வொன்றாக கழரும் நாள் வொகு விரைவில்போல....
ReplyDelete