Header Ads



கலீபா விருதுடன் ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பினார் (படங்கள் இணைப்பு)


பஹ்ரெய்னுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், பிரதிநிதிகள் குழுவினரும் இன்று நாடு திரும்பியுள்ளனர். 
30-04-2014 மாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை ஜனாதிபதி வந்தடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, அனுர பிரியதர்சன யாபா, ராஜித சேனாரட்ன, லக்ஸ்மன் யாபா அபேவர்தன, பிரதி அமைச்சர்ககள், நாடர்ளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.

ஜனாதிபதிக்கு பஹ்ரெய்ன் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதி உயர் விருதான காலீபா விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது நான்கு முக்கியமான உடன்படிக்கைள் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.