Header Ads



ஹிஜாப் விவகார வழக்கு: 13 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

(Tm) முஸ்லிம்களின் உடையான ஹிஜாபை பாடசாலைக்கு அணிந்து வரக்கூடாது என்று தனக்கு நாவல ஜனாதிபதி வித்தியாலய அதிபரால் கொடுக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில்  பிரதிவாதிகள், தங்களுடைய காரணங்களை தெளிவுப்படுத்துவதற்காக அந்த வழக்கை, உயர்நீதிமன்றம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

ஹிஜாபை பாடசாலைக்கு அணிந்து வரக்கூடாது என்று தனக்கு நாவல ஜனாதிபதி வித்தியாலய அதிபரால் கொடுக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து அந்த வித்தியாலயத்தில் பயிலும் 11 வயது மாணவியான பாத்திமா ஹகீனா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதியரசர்களான சந்திரா ஏக்கநாயக்க,ஈவா வணசுந்தர மற்றும் புவனகே அலுவிஹார கியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மனுவில், பிரதிவாதிகளாக வித்தியாலயத்தின் அதிபர் தக்சில நயன பெரேரா துணை அதிபர் ஹேமமாலி 7 ஆம் வகுப்பாசிரியை திருமதி  நடோதுன்ன ஆகியோருடன் மாகாண கல்வி பணிப்பாளர், கல்வியமைச்சர் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அந்த மாணவி தனது மனுவில் பாடசாலை அதிபரால் தான் தீவிரமான மனக்கஷ்டங்களுக்கு  உட்படுத்தப்பட்டதாகவும் தனது சமய ஆசார முறைப்படி அணியும் ஆடையை அணியக்கூடாது என்று நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் மேலும் இந்த அதிபர் முஸ்லிம் மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கு எதிரான மனேநிலையில் உள்ளவர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

வித்தியாலய அதிபரின் இந்த நிலைப்பாடு கல்வி அமைச்சினால் டிசெம்பர் 12 ஆம் திகதி அனுப்பப்பட்ட சுற்று நிருபத்திற்று எதிரானது என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த சுற்று நிருபத்தின்படி எல்லா தேசிய, மாகாண, தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் தங்கள் சமய ஆசாரத்திற்கு அனுசரணையான பாடசாலை உடையை அணிந்து வரலாம் என்று கல்வி அமைச்சில் செயலாளரால் கூறப்பட்டிருக்கிறது.

மனுவை விசாரணைக்கு மார்ச் மாதம் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து நீதியரசர்கள் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டதுடன் வழக்கை ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

2 comments:

  1. முறையான அனுகுமுறை மாஷா அல்லாஹ். இறைவன் உங்களோடு இருப்பான்,இதுதான் ஜிகாத்தும், எந்த ஷக்திகளின் கோரிக்கைக்கும் வழக்கை விட்டு கொடுக்க வேண்டாம்,உயர் மட்ட முஸ்லிம் அரசியல் வாதிகளே இதனை வாபஸ் பெறும்படி உங்களை கேட்டு வரக்கூடும்,தயவுசெய்து அப்படி ஏதும் செய்து விடாதீர்கள்.

    இறைவன் தந்த தருணத்தை சரியாக பயன்படுத்தாவிட்டால்,உங்களுக்கே எதிர் விசாரனை நாளை கிட்டும்.என்ன செய்வீர்கள்?

    ReplyDelete
  2. உன்மைதான் ஸாஜகான் நலுவ விடக்ககூடாது

    ReplyDelete

Powered by Blogger.