Header Ads



இலங்கையில் 2 பாகிஸ்தான் பெண்களுக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் போதைப் பொருள் கடத்திய இரண்டு பாகிஸ்தானிய பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் எம்.எம்.ஏ. கபூர் இந்த தண்டனையை விதித்துள்ளார்.

டுபாயிலிருந்து குறித்த இரண்டு பாகிஸ்தான் பெண்களும் போதைப் பொருட்களை கடத்தியுள்ளனர். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட குறித்த இரண்டு பெண்களும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 30 வயதான சமீன் சுபைடா மற்றும்  26 வயதான தாரீக் சீனா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஜூலை மாதம் குறித்த பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் போதைப் பொருளை கொண்டு வர முயற்சித்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


1 comment:

  1. நாட்டையும் நாசமாக்கி, சமூகத்தையும் நாசமாக்கி, தூய்மையான இஸ்லாத்துக்கே துரோகம் செய்யும் இது போன்ற கேடு கெட்டவர்களுக்கு இதைவிட பெரிய தண்டனை வழங்கினாலும் நல்லது தான். எவனைக் கொன்றாவது தான் வாழ முயற்சிக்கும் இவர்களைக் கொன்றே போட்டாலும் என்ன?

    ReplyDelete

Powered by Blogger.