Header Ads



ரவூப் ஹக்கீம் கல்லை வயிற்றில் கட்டிக் கொண்டு, கடலில் பாய வேண்டும் - UNP


(நஜீப் பின் கபூர்)

ஐக்கிய தேசியக் கட்சி இன்று 18-03-2014 கொழும்பில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தியது. அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பதுளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பர்ணாந்து ரவூப் ஹக்கீமுக்கு ஒரு ஆலோசனை கூறி இருக்கின்றார். ரவூப் ஹக்கிம் கல்லைக் கட்டிக் கொண்டு கடலில் பாய வேண்டியதுதான் என்று ஹரின் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பல தவறுகளை இழைத்திருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியில் தேர்தல் கேட்டு வாக்குகளைப் பெற்றுக் கொண்டு ரவூப் ஹக்கீம் கட்சி மாறுவார் என்று தெரிந்து கொண்டும் நாம் அவர்களை எமது தேர்தல் பங்காளியாக சேர்த்து வந்திருக்கின்றோம். இந்த நிலமை இதற்குப் பின்னர் நடக்கக்கூடாது என்று நான் கட்சி செயற் குழுக் கூட்டத்தில் பேசி இருக்கின்றேன். இதனை பலபேர் ஆமோதித்திருக்கின்றனர். எனவே எதிர் காலத்தில் எமது கூட்டில் ரவூப் ஹக்கீம் தொண்டா போன்றவர்களை நாம் இணைத்துக் கொள்ள மாட்டோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லிம்களின் வாக்குப் பெற்றதத்தரக்கூடிய முஸ்லிம்கள் தலைவர்கள் எமது கட்சியில் நிறைய இருக்கின்றார்கள்.

இப்படி ஒரு குறிப்பை நாம் ஹரினுக்குச் சொல்லி வைக்க விரும்புகின்றோம். நீங்கள் தேர்தல் காலங்களில் இப்படிப் பேசினாலும் பொதுத் தேர்தல் என்று வந்து விட்டால் இவை எல்லாவற்றையும் உங்கள் கட்சி மறந்துவிட்டு நீங்கள் இன்று குற்றம் சாட்டுகின்றவர்களுடன் நிச்சயம் கூட்டு போடுவீர்கள். ரணில் உங்கள் கட்சித் தலைவராக இருக்கும் வரை ஹக்கீமுக்கு உங்கள் கட்சியில் கதவுகள் எப்போதும் கூட்டுக்கு திறந்துதான் இருக்கும். இதனை நீங்கள் பொறுத்திருந்து பார்க்க முடியும்.

என்னதான் கர்ச்சித்தாலும் நமது ராஜபக்சாவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஹக்கீம் தேவை. ஹக்கீம் என்னதான் தர்க்கம் பண்ணினாலும்  பாராளுமன்றத் தேர்தலில் மு.கா.ஆசனங்கள் பெற அவருக்கு ஐக்கிய தேசிய கட்சி தேவை. இதுதான் நமது நாட்டு அரசியல். எனவே எவரையும் சேர்த்துக் கொள்ளாமல் உங்களால் ராஜபக்சாவை ஓட்ட முடியும் என்ற நினைப்புப் போலும்.

பேசிதற்கு முரணாக கூட்டுப் போட்டு  அதற்கு நமது அரசியல் வியூகம் என்று நீங்களும் ஹக்கீமும் வேறு  பெயர் வைத்து நியாயம் சொல்வீர்கள் என்பது மக்களுக்குத் தெரியும்! ஹக்கீமை கடலில் தள்ளும்போது உங்கள் கட்சித் தலைவர் ரணிலை எங்கு தள்ளப்போகின்றீர்கள் என்பதனையும் மக்களுக்குச் சொன்னால் நல்லது.      

3 comments:

  1. neenga mudhalla kadalla irunthu veliya vara paarunga

    ReplyDelete
  2. What he made statement is 100% correct but insert of Ranil by mistakenly he call it Hakeem.

    ReplyDelete
  3. நீங்களும் ஒங்க கட்சியாளர்களும் முதல்ல முதுகுப்பக்கமா கம்பயாவது கட்டிகொண்டு நிற்க முயற்சி செய்யவும்.

    ReplyDelete

Powered by Blogger.