Header Ads



முஸ்லிம் குழுக்கள் புதிய பள்ளிவாசல்களைத் திறப்பதால் மோதல்கள் - பொலிஸ்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலமாக முஸ்லிம் குழுக்களுக்கிடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதல் சம்பவங்கள் மதக் குழுக்களுக்கு மத்தியில் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.

அண்மையில் இரண்டு முஸ்லிம் குழுக்களுக்கிடையே மாதம்பே மற்றும் குச்சசேலி பகுதிகளில் மோதல் இடம்பெற்றுள்ளது.

பல்வேறு முஸ்லிம் குழுக்கள் புதிய பள்ளிவாசல்களைத் திறப்பதால் இவ்வாறு மோதல்கள் ஏற்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இது போன்ற சர்ச்சைகள் புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு மூலம் தான் தீர்க்கப்பட முடியும்.

எந்த பகுதியில் புதிய மசூதிகள் கட்டவேண்டுமென சரியான முடிவுகளை எடுக்க அமைச்சுக்கு உரிமை உண்டு. அதனால் ஒரு மசூதி தொடர்பான எந்தப் பிரச்சனையாயினும் அமைச்சு எடுத்து கொள்ள வேண்டும்.

எந்தக் குழுவென்றாலும் வன்முறை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

4 comments:

  1. maarka arivu illai, perum ulaga arvum illai, vellayan inku vandu matham maarra muyarchitha velai, thakwa enum ul achchaththil irunthu vali naadathi intha maarkathtahi nam kayil thantha anth munnorkal intru kaafir entrum, shirku seithavan endum naalukku naal fathwa koduthu intru anniyavan sirikum alavuku vanthuvittathu....engal ooril ansar sunnathi muhammdiya enum pallivasalil O/L, A/L paditha maanavarkal surrula enum peyaril 3000 rupa koduthu, thangaludaya palliki varavaithu mulu wahabiyaha maarrum nadavadikkai nadaiperuhinrathu. intha seyal vadivathin or angam than intha pallivasal pirachinai, intru ondum nalai ondum solvargal, maarakam arasiyalaki vilayadum vethanthigal.

    ReplyDelete
  2. Note:- This decision will not apply to BBS

    ReplyDelete
  3. அரைவேக்காடுகளும் மதவெறியர்களும் பதவிக்கு வருவதால்தான் நாட்டில் பிரச்சினையே தவிர வேறில்லை என்று நான் அடித்துச்சொல்கின்றேன்..

    ஐயா சொன்ன பிரச்சினை நடந்து பல காலங்கள் போன் பின் இப்போ இதை பேசக்காரணம் என்னவோ. தூங்கிட்டிருந்தாரோ.

    ReplyDelete
  4. மிக உண்மையான விடயம்,இதட்கெல்லாம்,அதிகாரத்தை கையில் எடுத்துக்கொளும் பொறுப்பாளிகளின் அசமந்தப்போக்கு தான் காரணம்,தகுதியில்லாத்வர்கள் பொறுப்புக்களை தகுதியுள்ளவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.இதில் பெறிதும் பங்கு வகிப்பது அகில இலங்கை ஜம்மியயதுல் உலமா சபை.இவர்களே குர்-ஆன் சுன்னாவின் பக்கமில்லை,அப்போ எப்படி மற்றவர்களை இதன்பால் ஒன்றுசேர்ப்பது?

    நிச்சயம்,இதுதான் மார்க்கத்திற்கு செய்யும் பெறும் துரோகம்,சொற்ப இலாபத்திற்காகவும்,குறுகிய அறிவிலும் சிலர் மதத்திற்கு எதிராக செயட்படுகின்றனர்.இறையச்சம் என்பது கொஞ்சம்கூட இவர்களிடமில்லை.எல்லாவற்றுக்கும் கணக்கு வழக்குண்டு.

    ReplyDelete

Powered by Blogger.