புலிகள் அமைப்பின் புதிய தலைவர் குறித்து எச்சரிக்கை..!
(Tm) தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் உயிர்கொடுப்பதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படும் கஜீபன் என்றழைக்கப்படும் கோபி(31) பொலிஸார் தேடி வருவதாகவும் அவர் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இவர் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடையும் காலக்கட்டத்தில்; இராணுவத்திடம் சரணடைந்து பூந்தோட்டம் முகாமிலிருந்து தப்பித்து வேலைவாய்ப்புக்காக கட்டார் சென்றுள்ளார்.
அதன் பின்னர் ஐரோப்பியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டு தமிழ் புலிகள் புலம்பெயர் அமைப்பின் தலைவர் என்று கூறப்படும் பெரும்நாயகம் சிவபரன் என்றழைக்கபடும் நதியாவானை நோர்வேயில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அவரிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு இலங்கைக்கு திரும்பிய அவர், புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவரான சண்முகலிங்கம் சிவசங்கர் என்றழைக்கப்படும் ஜயகுமார் பாலேந்திரன் (வயது 50) (பொட்டு அம்மானின் கீழ் பயிற்சிபெற்றவர்) கிளிநொச்சி தர்மபுரத்தில் விதவை பெண்ணொருவரின் வீட்டில் இருக்கும் போது பொலிஸார் கைது செய்வதற்கு சென்றிருந்த வேளையில் நூலிழையில் தப்பிவிட்டார்.
அவரை கைது செய்வதற்கு கி நிராயுதபாணியாக சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் வயிறு மற்றும் பாதத்தின் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு அந்தவீட்டிலிருந்து தப்பிச்சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோபியும் அந்த வீட்டில் இருந்ததாகவே பயங்கரவாத புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக தேவைப்படுகின்ற கீழ்கண்ட இரண்டு நபர்கள் தொடர்பில் தகவல்களை தருவோருக்கு தலா 10 இலட்சம் ரூபா சன்மானமாக வழங்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இவர் கஜீபன் பொன்னய்யா செல்வநாயகம் அல்லது கோபி அல்லது காசியன் என அழைக்கப்படும் வயது 31. உயரம் 06 அடி. பொது நிற தோற்றத்தையும் கொண்டவர் இவரது இடதுபக்க உதட்டின் மேல் பகுதியில் வெட்டுக்காயம் உள்ளது.
இவர் பற்றி ஏதாவது தகவல் கிடைக்கப்பெற்றால் தொலைபேசி இலக்கம் 011-2451636 பெக்ஸ் 011-2321838 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியதரவும்.
தகவல் தருபவருக்கு ரூபா 10 இலட்சம் ரூபா வழங்கப்படும் என்றும் தகவல் தருபவர் பற்றிய இரகசியம் பேனப்படும். என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவர் நவரத்னம் நவநீதன் அல்லது அப்பன் என்றழைக்கப்படும் வயது 36. உயரம் 05அடி 02 அங்குலம் பொது நிற தோற்றத்தையும் கொண்டவர் இவர் பற்றி ஏதாவது தகவல் கிடைக்கப்பெற்றால் தொலைபேசி இலக்கம் 011-2451636 பெக்ஸ் 011-2321838 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியத்தரவும். தகவல் தருபவருக்கு ரூபா 10 இலட்சம் ரூபா வழங்கப்படும் என்றும் தகவல் தருபவர் பற்றிய இரகசியம் பேனப்படும். என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
.jpg)
Again their preparing to destroy Tamil civilians
ReplyDeleteபொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் சென்ற வருடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது யாழ்பாணம் சென்ற நாடுகளின் உறுப்பினர்களை உறவுகளை இழந்தவர்கள் ஆர்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கையில் கைதாகிய அந்த விதைவைத்தாயும் அவரது மகளுமே உரத்த குரலில் தங்கள் உறவுகளை தம்மிடம் தருமாறு கேட்டு அகிம்சை வழியில் போராட்டம் நடத்தியது உலகறிந்த விடையம்.
ReplyDeleteஅவர்களை கைது செய்வதற்கு கையாலாகாத இலங்கை அரசின் புலனாய்வுப்பிரிவு சோடித்த கதையே இந்த நாடகம். எக்காலத்திலாவது புலிகள் வைத்த குறி விலகியதாக வரலாறில் உள்ளதா ? அதுவும் பொலிசாரும் இராணுவமும் கிளிநொச்சியை சுற்றிவளைத்தநிலையில் அந்த நபர் தப்பித்துப்போக சாத்தியங்கள் தற்போதைய சூழ் நிலையில் இலங்கையில் உள்ளதா ? யார் பெற்ற பிள்ளையோ இந் நபர் உயிருடன் உள்ளாரா ? என்பதுவே இன்றைய கேள்வியும் கைதாகிய விதவைத்தாயும் அவரது மக்களினதும் விடுதலை எப்போது ?...........