Header Ads



நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மக்களிடம் கையளிக்கப்பட்டது


(யு.எம்.இஸ்ஹாக்)

நீண்ட காலமாகப் புனரமைப்பு செய்யப்பட்டு வந்த நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மக்களிடம் கையளிக்கப் பட்டுள்ளது 

  பழங்காலத்தில்  இலுக்கு ஓலையினால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வரலாற்றையுடைய பழம்பெருமை வாய்ந்த இப்பள்ளிவாசல் இன்று முழுக்க முழுக்க நிந்தவூர் மக்களின் பரோபகார சிந்தனையின் மூலமும், வள்ளல் குணத்தினாலும் சுமார் ரூபாய் 100 கோடி செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

இதன் நிர்மாண வேலைகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இன்று (22) இப்பள்ளிவாசலை மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எம்.ஏ.எம்.றசீன் தெரிவித்தார்.

  இன்றையதினம் பாரிய கந்தூரி (அன்னதான நிகழ்வு) நிகழ்வும்   50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது 

பள்ளிவாசலின் அழகையும், பிரமாண்டமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கந்தூரி நிகழ்வின் காட்சிகளையும் ஊரிலுள்ள  அணைத்து மக்களும் பார்வையிடுகின்றனர் 

No comments

Powered by Blogger.