இஸ்லாத்தை பின்பற்றும் சகோதரர்களுக்கு வடரக விஜித தேரரின் அழைப்பு
(அஷ்ரப் ஏ. சமத்)
இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் அனைத்து சகோதரர்களையும் 2014.03.24 திங்கற்கிழமை காலை 9 மணிக்கு வரலாற்றுத் தீர்மானம் எடுப்பதற்கு பொதுபலசேனாவினால் தாக்கப்பட்ட வடரக விஜித தேரரின் தலைமையில் முஸ்லீம்களை அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்படி விடயமாக நேற்று வெள்ளிகிகிழமை ராஜகிரியவையில் ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் அறிவித்தல் நோட்டிஸ் வழங்கப்பட்டது.
நோட்டிசில்,
முஸ்லீம், மக்களை இலக்காகக் கொண்டு பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் தொடர்ந்து முஸ்லீம் மக்களை துன்புறுத்தி வருகின்றனர். அண்மைக் காலமாக அவர்களது தீவிர நடவடிக்கைகள் எந்த வகையிலும் உசிதமானதல்ல. சட்டரீதியற்ற பொலீசார் தாம் எனக் கூறிக் கொண்டு தாய் நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமன்றி, சமயங்களைக் கூட தாக்கி மீண்டும் தாய் நாட்டை இரத்தக் களமாக்க முயற்சிக்கின்றனர்.
நமக்காக என்றும் குரல் கொடுக்கின்ற சமாதானத்தை நேசிக்கின்ற அதற்காக உழகைகின்ற வடரக விஜித தேரரின் தலைமையில் சகல சமயத் தலைவர்களையும் உள்ளடக்கி 2014.03.24ஆம் திகதி திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு சகல சமயத்தலைவர்களையும் உள்ளடக்கிய வரலாற்றுத் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளனா.
அத்தினம் வெள்ளை உடையுடன் காலி முகத்திடலுக்கு சமுகமளிக்கும்படி வேண்டுகின்றேன்.
இப்படிக்கு
சுகல சமய இனங்களுக்கிடையே சமாதானத்திற்காக பிராத்திப்போர் என அந் நோட்டிசில் சிங்கள தமிழ் முலம் சகல கொழும்பில் உள்ள ஜும்ஆப் பள்ளிவசாலில் முன் விநியோகிகப்பட்டது.


மிகவும் நல்லதொரு முயற்சி... இதை உதாசீனம் செய்யாது.. முடியுமான வரை.. அனைத்து முஸ்லிம்களும் கட்சி பேதம் இன்றி பங்கு கொள்ளுமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் இந்த முயற்சியை வெற்றியடையச் செய்வானாக... ஆமீன்
ReplyDeleteமுஸ்லிம்களுக்காகக் குரல்கொடுத்து தனது இனத்தினராலேயே அநியாயமாகத் தண்டிக்கப்பட்டும் ஒரு பிக்குவாக இருந்து கொண்டு முஸ்லிம்கள் மீது அநியாயங்கள் இழைக்கப்படுவதை பகிரங்கமாக சுட்டிக்காட்டும் இவரின் இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளான முஸ்லிம்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். இது முஸ்லிம்களுக்கு இன்றைய சூழலில் மிகப் பிரதானமானதாகும். எனவே கொழும்பு அதனைச் சூழாலுள்ள பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்கள் விஷேட அறிவித்தல் கொடுத்து மக்களைக் கலந்துகொள்ளச் செய்ய வேண்டும். விஜித தேரருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக.
ReplyDeleteதயவு செய்து வரலாற்று தவறுகளை செய்துவிடாதீர். விஜித தேரர் நல்லவர்தான். அனால், எப்படியாவது ஒரு பிரச்சினையை உருவாக்கி அதன் மூலம் முஸ்லிம் இனத்தை அழிப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு அண்மையில் மியன்மார் சென்ருவந்தவனின் அண்மைக்கால அறிக்கைகளை நோக்கும்போதும். இவ்விக்கட்டான நிலையிலும் அவனுக்கெதிராக மௌனியாக இருக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கூர்ந்து கவனிக்குமிடத்து அமைதி காப்பதுதான் அறிவுடைமையாகும்.
ReplyDelete