நவமணி செய்தியை வைத்து பிழையான பிரசாரம்
இந்தவார (21-23 மார்ச் 2014) நவமணி இதழின் 21ஆம் பக்கத்தில் வெளியான களுத்துறை மாவட்ட ஐ.தே.க. வேட்பாளர் தாஹிர் பாஸியின் செய்தித் தலைப்பு தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது. இந்த தவறுக்காக ஆசிரியர்பீடம் தனது மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது. இந்த செய்தியை எதிரணி வேட்பாளர்கள் சிலர் இந்தச் செய்தியை வைத்து தாஹிர் பாஸி முஸ்லிம் காங்கிரஸுக்கு கட்சி மாறியதாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மைகளும் இல்லை. எனவே, எதிரணி வேட்பாளர்களின் போலியான பிரசாரங்களை யாரும் நம்பி ஏமாறவேண்டாம்.
களுத்துறை முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களியுங்கள்
எனது அரசியல் சேவை மக்கள் சேவையாகும். நான் அரசியலில் சம்பாதிக்க வரவில்லை. எனது சொத்துக்களை இழந்துதான் அரசியல், மக்கள் சேவைகளை மேற்கொண்டு வருகின்றேன். எனக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக தொடர்ந்து மக்கள் முன் போகமுடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்தும் உங்களது வாக்குகளை ஐ.தே.க.வுக்கு வழங்கவேண்டுமென மேல் மாகாண சபை தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் பாணந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.என். தாஹிர் பாஸி தெரிவித்தார்.
இவர் இருதய நோய் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தல் வேண்டும். வெறுமனே கட்சிக்கு மட்டும் உறுப்பினர்களைப் பெற்றுக் கொடுப்பதில் பயனில்லை. சமூகத்துக்கான உறுப்பினர்களையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
தனது சுகத்துக்காக பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், தனது வெற்றிக்காக செயல்படுமாறும் கேட்டுக் கொண்டதோடு சுகமடைந்ததும் மக்கள் சேவைகளை தொடர ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Post a Comment