கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாடல்
(ஹாசிப் யாஸீன்)
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனைக்குடி, இஸ்லாமாபாத், மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்திகள் சம்பந்தமாக பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடல் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூயின் கூட்ட மண்டபத்தில் இன்று (16) நடைபெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜெலீல், கல்முனை முஸ்லிம் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எம்.ஏ.ஜௌபர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.எம்.அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, பௌதீக வளப்பற்றாக்குறை, தளபாடக் பற்றாக்குறை மற்றும் பாடசாலையின் ஏனைய தேவைகள் பற்றி பாராளுமன்ற உறுப்பினரிடம் அதிபர்கள் எடுக்கூறினர்;.
இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் பற்றி அதிபர்களுடன் கேட்டறிந்து கொண்டதுடன் பாடசாலைகளின் குறைபாடுகள் மற்றும் பௌதீக அபிவிருத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை இவ்வருடம் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.



Post a Comment