Header Ads



மஹேல ஜெயவர்தனாவும் ஓய்வு பெறுகிறார்..!


இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான மஹேல ஜெயவர்தன, தான் சர்வதேச 20-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலக 20-20 போட்டிகள் நிறைவடைந்ததும் தான் ஓய்வு பெறுவதாக மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச 20-20 போட்டிகள் 49 இல் விளையாடியுள்ள மஹேல ஜெயவர்தன, கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்களில் இரண்டாமிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1335 ஓட்டங்களை மஹேல பெற்றுள்ளார். மூன்றுவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த பெருமையும் மஹேல ஜெயவர்தனவுக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது. மஹேல ஜெயவர்த்தன 20-20 போட்டிகள் 19 இற்கு, இலங்கை அணிக்கு தலைமை தாங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

இலங்கை அணியின் முதலாவது 20-20 அணித் தலைவர் என்ற பெருமை மஹேல ஜெயவர்தனவுக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.