Header Ads



கல்முனையில் ஜெனீவா பிரேணைக்கு எதிராகவும், மஹிந்தவிற்கு ஆதரவாகவும் பேரணிக்கு ஏற்பாடு


(ஏ.பி.எம்.அஸ்ஹர் + யு.எம்.இஸ்ஹாக்)

ஜெனீவாவில் அமெரிக்காவினால்  இலங்கைக்கு எதிராகக்கொண்டுவரப்பட்டுள்ள பிரேரனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தும் நாளை வெள்ளிக்கிழமை 2014.03.14 மாபெரும் பேரணியொன்று கல்முனையில் நடைபெறவுள்ளது.

 முஸ்லிம் சமுகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பேரணி நாளை வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலிலிருந்து ஆரம்பமாகவுள்ள இப்பேரணி கல்முனை நகரப் பிரதேசம் ஊடாகச்சென்று  பிரதேசசெயலகத்தில் வைத்து பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல், கல்முனை நகர் ஜும்ஆ பள்ளிவாயல், கல்முனை அன்சார் சுன்னத்தில் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாயல், இஸ்லாமபாத் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியன உட்பட இப்பிரதேசத்திலுள்ள 25பள்ளிவாயல்கள், 3வர்த்தக, கைத்தொழில் அமைப்புக்கள், 22 சமூக சேவை மற்றும் இளைஞர் அமைப்புக்கள், மற்றும் 20 க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கழகங்கள் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

3 comments:

  1. பள்ளி வாசல்கள் உடைப்புக்கு எதிராக பேசிய ஜெனீவாவுக்கு எதிராக பள்ளி வாசல்கள் மூலமாகவே ஊர்வலமா? தேவைதானா இந்த முட்டாள்தனமான வேலை. முன்னர் ஜமிய்யதுல் உலமா சபையினர் ஜெனீவா போய் அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்து பேசியும் ஜமிய்யதுல் உலமாவுக்கு அரசாங்கம் நன்றிக்கடனாக என்ன செய்தது?. ஹலால் சான்றிதழ் பறிக்கப்பட்டது. நீங்கள் என்னென்னவெல்லாம் பறிகொடுக்கப்போறீன்களோ.

    ReplyDelete
  2. வெட்கமில்லாத,உரோசமில்லாத முஸ்லிம்கள்.எத்தனை பள்ளிகள் உடைக்கப்பட்டாலும்,உடைக்க உடைக்க,கட்டிக்கொண்டே இருப்பீர்கள்,தவிர,உடைப்பவனை கவனிக்கமாட்டீர்கள்.

    உங்கள் தலை எழுத்தை கடவுளும் காப்பாற்ற மாட்டார்.

    ReplyDelete
  3. ஆர்ப்பாட்டக்காரர்கள், பொதுபல சேனா, ராவண பலய, சிஹல ராவய, ஹெல உறுமய எல்லாரும் அரசாங்கத்து ஆட்கள். இப்படி இங்க முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினயும் இல்லை, அரசாங்கமே ஹலால் சாப்பாடு தருது, பள்ளிக்கு பாதுகாப்பு தருது.
    போய் சொல்ல வேண்டியதுதானே! வெட்கமில்லயா? பறகஹதெனிய தவ்ஹீதின் அவமானம்.

    ReplyDelete

Powered by Blogger.