Header Ads



கல்முனையில் அதிகாரங்கள் முட்டி மோதுகின்றன

(எம்.எம்.ஏ.ஸமட்)

அதிகாரங்கள் ஒற்றுபடுவதன் ஊடாக பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடின் தெரிவித்தார். கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசியல் அதிகாரங்களும் நிர்வாக அதிகாரங்களும் ஒன்றிணையுமாயின் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதில் எத்தகைய தடைகளும் இருக்காது. அதிகாரத்திலுள்ள ஒரு தரப்பினர் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கின்ற போது மற்றுமொரு அதிகாரத் தரப்பினர் அவற்றிற்குத் தடையாகவுள்ளனர். இத்தடைகள் குறித்த அதிகாரத்தரப்பினருக்கு வெற்றியாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது பிரதேச மக்களே. அபிவிருத்தித் தாகத்தோடு மக்கள் அபிவிருத்திகளைக் காண்பதற்காக காத்துக்கிடைக்கையில், அதிகாராங்கள் முட்டி போதுவதனால் அபிவிருத்திகளின் பயன்கள் மக்களை அடையாமல் போகிறது.

இவ்வாறானதொரு நிலைதான் கல்முனையிலும் காணப்படுகிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். அரசியல் அதிகாரமும் நிர்வாக அதிகாரமும் மக்களின் நலன்களை நிறைவேற்றுவதற்காக இறைவன் நமக்களித்த கொடை. உலகில் பல்லாயிரக் கணக்கானோர். வாழ்கின்றனர். எல்லோருக்கும் அரசியல் அதிகாரமும் நிர்வாக அதிகாரமும் கிடைப்பதில்லை. இறைவன் எவருக்கு எது கிடைக்க வேண்டுமென்று எழுதிவிட்டானோ அதே அவருக்குக் கிடைக்கும்.
அவ்வாறு, கிடைக்கின்ற அதிகாரங்கள் மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக, பலிவாங்கல்களுக்காகவோ அல்லது வேறு விரும்பத்தகாத செயற்பாடுகளுக்காகவோ பாவிக்கப்படுதல் ஆரோக்கியமானதல்ல.

ஒரு நாடோ அல்லது நகரோ அல்லது பிரதேசமோ முழுமையாக அபிவிருத்தியடை வேண்டுமாயின,; அரசியல் அதிகாரங்களும் நிர்வாக அதிகாரங்களும் கைகுழுக்கப்படல்வேண்டும். அந்தவகையில் கல்முனைப் பிரதேசத்தின் அபிவிருத்தியில் அரசியல் அதிகாரங்களும் நிர்வாக அதிகாரங்களும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் தேவையாகும். 
இந்ததத் தேவை நிறைவேற்றப்பட்டு இப்பிரதேசம் மேற்கு மற்றும் தெற்குப் பிரதேசங்கள் அடைந்து வரும் அபிவிருத்திகள் போல அபிவிருத்தியடைவதற்கும் பிரதேச மக்கள் நன்மையடைவதற்கும் ஒன்றினைவது அவசியமென வேண்டுகின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, அரசியல் திணைக்களகங்களின் தலைவர்கள், உயர் அதிகாரிகள், பிரதேச மக்கள் பிரதிநிதிகளின் பிரநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.