முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறவு என்றோ ஒரு நாள் மலரும் - ஹக்கீம்
(அஷ்ரப் ஏ சமத்)
ஞாயிறு வீரகேசரி பிரதம ஆசிரியர் ஆர்.பிரபகர் எழுதிய 140 ஆசிரிய தலைப்புக்கள் கொண்ட 'தரிசனம் ' எனும் நூல் இன்று 16-03-2014 பம்பலப்பிட்டி சரவஸ்வதி மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நூல் வெளியீட்டு வைபவம் வீரகேசரியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், சிறப்பு அதிதியாக நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம், இந்திய பிரதித தூதுவர் பி.குமரண், பேராசிரியர் சபா ஜெயராசா, சிறப்பு பேச்சாளர் தமிழருவி த சிவகுமாரன், ஆய்வுரையை ஸ்ரீ பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன், தம்பி ஹக்கீம் மிகவிரைவில் தமிழ் முஸ்லீம் ஒன்றினைவு மலர்வதற்கு நான் எதிர்பார்ப்பதகாகச் சொன்னார். அதற்காக நான் காத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.வுவனியாவில் மற்றும் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றம் நடைபெறுவதாக தெரிவித்தார். அத்துடன் இராணுவம் பல காணிகளை பிடித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தாh.
அமைச்சர் ரவுப் ஹக்கீம், அமைச்சரவையில் இருந்துகொண்டு 13வது திருத்தத்தை கொண்டுவரும் சட்டத்தை எதிர்ததாகவும் தெரிவித்தார். அதேபோன்று ஊடக சுதந்திரத்திலும் ஒரு திருத்தம் கொண்டுவந்ததை எதிர்த்தாகவும் தெரிவித்தார்.
நாடு நரல் அபிவிருத்தித் சட்டத்தை எதிர்த்தாகவும் கிழக்கு மாகணத்தில்; இதனை எமது மாகாணசபையும் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் பதவியிருந்தபோது இந்த நகர்வை தோற்கடித்தாகவும் தெரவித்தார்.
அன்று இரா சம்பந்தன் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைததிருந்தால் அதன் பின்னர் நடைபெற்ற் வடமாகாணசபைத் தேர்தலை நடாததியிருக்க மாட்டார்கள்.
ஆனால் அண்னன் சம்பந்தன் ரீ.என்.ஏ யோடு சேர்ந்து கேளுங்கள் அல்லது தனித்து தேர்தல் கேளுங்கள் என கேட்டுதற்கிணங்க கிழக்கில் நாங்கள் தணியாக தேர்தலில் கேட்டோம். மவிரைவில் முஸ்லீம் காங்கிரசும் ரீ.என்.ஏ உறவு என்றோ ஒரு நாள் கட்டாயம் மலரும் எனவும் அங்கு ஹக்கீம் தெரிவித்தார்.


Post a Comment