வெள்ளவாய பிரதேச சபையின் புதிய நிருவாகக் கட்டிடத் தொகுதி
(ஜே.எம். வஸீர்)
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வருமானம் குறைந்த உள்ளுராட்சி சபைகளை இனங்கண்டு அவற்றிற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் புறநெகும செயற்திட்டத்தின் கீழ் வெள்ளவாய பிரதேச சபையின் புதிய நிருவாகக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு மற்றும் காலி இமுதுவ நவீன சந்தைத் தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு என்பன உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
வெள்ளவாய பிரதேச சபையின் புதிய நிருவாகக் கட்டிடத் தொகுதிக்காக 30.7 மில்லியன் ரூபா செலவிடப்படவள்ளதுடன் காலி இமுதுவ நவீன சந்தைத் தொகுதிக்காக 14.5 மில்லியன் ரூபா செலவிடப்படள்ளது.
இக் கட்டிட வேலைத்திட்டம் 2015 ஏப்;ரல் மாதம் நிறைவு பெறவுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர் ஜகத் புஸ்ப்ப குமார , அமைச்சர் சுமேதா ஜயசேண பிரதி சபாநாயகர்; சந்தி;ம விரக்கொடி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க, வெள்ளவாய பிரதேச சபையின் தலைவர்; மற்றும் காலி இமுதுவ பிரதேச சபையின் தலைவர்; , புறநெகும செயற்றிட்டத்தின் பணிப்பாளர் ஆனந்த கமகே அமைச்சின் உயர் அதிகாரிகளும் ஊழியர்களும் பொதுமக்களும் இந்நிகழ்வகளில் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)

.jpg)
Post a Comment