Header Ads



ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி

(முஹம்மது மிஹ்ழார்)

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று 11.03.2014 செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். சுமார் 08 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ். 

இவ் விளையாட்டுப் போட்டியின் பிரதம அதிதியாக உற்பத்தி ஊக்குப்புத் திறன் அமைச்சர் கௌரவ அல்ஹாஜ். பஷீர் சேகுதாவூத் அவர்களும் மற்றும் கிழக்குமாகாண சபை பிரதித் தவிசாளர் கௌரவ அல்ஹாஜ். எம்.எஸ். சுபைர் அவர்களும், ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் கௌரவ அல்ஹாஜ். செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களும் கலந்து சிறப்பித்தார். இவ்விளையாட்டுப்போட்டி கல்லூரியின் முதல் ஏ.எஸ. இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இவ்விளையாட்டுப்போட்டியின் சம்பியன் இல்லமாக றூமி இல்லம் (பச்சை) தெரிவானதுடன், உமர் இல்லம் (நீலம்) இரண்டாவது இடத்திற்கும், இக்பால் இல்லம் (சிகப்பு) மூன்றாவது இடத்திற்கும் தெரிவானது. 



No comments

Powered by Blogger.