தசையை வளரச் செய்ய உடலில் திரவத்தை செலுத்தியவர் உயிராபத்தில்
தசையை வளரச்செய்ய எண்ணெய் கலவை மற்றும் மதுபானத்தை உடலில் செலுத்திக்கொண்ட பிரேஸில் நாட்டவர் ஒருவர் உயிராபத்திற்கு முகம்கொடுத்துள்ளார்.
ஆர்லன்டோ டி சூசா தனது புஜத்தை 29 அங்குலத்திற்கு வளர்த்துக்;கொண்டுள்ளார். இதன்மூலம் அவர் பிரேசில் நாட்டின் மிகப்பெரிய புஜத்தை உடையவராக சாதனை படைத்துள்ளார். இதற்காக அவர் உடலுக்குள் செலுத்திக்கொண்ட திரவங்களால் உயிராபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு செய்ததால் எனது நண்பன் பொலின்ஹோ ஏற்கனவே இறந்து விட்டார் என்று சூசா குறிப்பிடுகிறார். "அவரது மரணம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் ஒன்றாகவே இந்த திரவங்களை உடலில் செலுத்திக்கொண்டோம். அவர் அதிகமாகவே அதைச் செய்தார்;" என்று 43 வயதான சூசா குறிப்பிட்டார்.
தசையை வளரச் செய்யும் இந்த எண்ணெயை பயன்படுத்துவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான திரவத்தை பயன்படுத்திய ஒருசிலர் அதனை அகற்ற சத்திரசிகிச்சை செய்துகொண்டபோது கைகளெங்கும் சீழ் கட்டி ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டுள்ளனர்.
இந்நிலையில் சூசா தனது சுகாதார நிலை குறித்து மருத்துவர்களை நாடியபோதும், அவர் தானாகவே இதனை செய்துகொண்டதால் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர்.

Post a Comment