Header Ads



அரசாங்கத்திற்கும், நாட்டுக்கும் எதிராக செயற்படுவோரை கடவுள் தண்டிப்பார் - பிரதியமைச்சர் அப்துல் காதர்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை கடவுள் தண்டிப்பார் என பிரதி அமைச்சர் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் சகல வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டு, நாட்டுக்கு எதிராக ஜெனிவாவில் அறிக்கை வழங்கி வரும் நபர்களை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் கடவுள் தண்டிப்பார்.

ஏதேனும் பிரச்சினை இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். நாட்டுக்கு எதிராக சர்வதேச அமைப்புக்களுக்கு அறிக்கை வழங்குவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எந்தவொரு விடயத்தையும் செவிமடுக்கக் கூடிய நன்றியுள்ள தலைவர். ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு வேறு எவரிடமும் தீர்வு இருக்காது.

புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போருக்கு முஸ்லிம் நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. ஜெனீவா தீர்மானத்தை தோற்கடிக்கவும் முஸ்லிம் நாடுகள் ஆதரவளிக்கும். அரசாங்கத்திற்கும் நாட்டுக்கும் எதிராக செயற்படுவோரை கடவுள் தண்டிப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. காதர் ஹாஜி சமுகத்திற்காக நீங்க என்ன குறள் குடுத்து இருக்கீங்க, ஒங்கட அரசியல் இலாபத்திக்காக இவ்வளவு குறைக்கிறீகளே,

    ReplyDelete
  2. இதற்கும் பள்ளிவாசல்களில் துஆ கேட்பதற்கு உத்தரவிடலாமே....?? அப்படியானால் அதில் 'நாட்டுக்கும் முஸ்லீம்களுக்கும் துரோகம் செய்தவர்களுக்கு' என்று சேர்த்துக்கொள்ளல் வேண்டும்..!!

    ReplyDelete

Powered by Blogger.