Header Ads



குற்றவாளிகளை தூக்கிலிட்டு கொல்ல தான் தயாராக இருக்கிறேன் - அமைச்சர் திஸ்ஸ கரலியத்த

எப்படியான நரகத்திற்கு சென்றாலும் குற்றவாளிகளை தூக்கிலிட்டு கொல்ல தான் தயாராக இருப்பதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாலியல் வல்வுறவுக்கு கொலை மற்றும் போதைப்பொருள் விற்பனை போன்ற பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மரண தண்டனையை அமுல்படுத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

நாட்டில் உள்ளவர்கள் பிரம்புக்கு அஞ்சியவர்கள், தண்டனைக்கு அஞ்சியவர்கள். அமைச்சர் ஒருவரினால் சட்டத்தை அமுல்படுத்த முடியாது. குற்றவாளிகளை தூக்கிலிட்டு கொலை செய்யும் அதிகாரத்தை வழங்கினால், எந்த நரகத்திற்கு சென்றாலும் குற்றவாளிகளை தூக்கிலிட நான் தயார் எனவும் அமைச்சர் கரலியத்த குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. NEENGAL ANGUSUTTY ADTTAALUM SAREEAA SATTATTIL TAAN WANDU NPPEERKAL EDAITANEE 1435 AANDUKALUKKU MUN ISLAM SOLLIYADU

    ReplyDelete

Powered by Blogger.