பொலன்னறுவையில் வீட்டிற்குள் மலை பாம்பு, யாழ்ப்பாணத்தில் குடியிருப்புக்குள் முதலை (வீடியோ)
பொலன்னறுவை, தியசென்புர பகுதியில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த மலைப்பாம்பு ஒன்றை குறித்த வீட்டின் உரிமையாளர்கள் பிடித்து வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த மலைப்பாம்பு 8 அடி நீளமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் இந்த மலைப்பாம்பை கிரிதல சரணாலயத்தில் விடுவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – அரியாலை நாயன்மார்கட்டு ராஜவீதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்த முதலை ஒன்றை இளைஞர்கள் இன்று பிடித்துள்ளனர்.
அதிகாலை 5 மணியளவில் சுமார் 6 அடி நீளமான முதலை குடியிருப்புக்குள் நுழைந்தது. இந்த முதலையை கிளிநொச்சி மாவட்ட வனவள அதிகாரியிடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


Post a Comment