Header Ads



இலங்கையில் மத ரீதியான பிரச்சினைகள் - ஜெனீவாவில் எதிரொலித்தது


இலங்கையில் அவ்வப்போது இடம்பெற்ற  சம்பவங்களே நாட்டில் மத ரீதியான பிரச்சினைகள் தோன்றுவதற்குக் காரணம் என எடுத்துக்காட்ட மேற்கொள்ளப்படுகின்ற பிரயத்தனங்கள் தொடர்பில் கவலை அடைவதாக ஜெனிவாவின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்கின்ற இலங்கை பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே தெரிவித்துள்ளார்.

சமயம் உள்ளிட்ட பல்வேறு சுதந்திரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதிகள் சமர்ப்பிக்கின்ற ஆண்டறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, மனிதாபிமான நடவடிக்கைகளின் போது, புனரமைப்பு மற்றும் புனர்வாழ்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மனித உரிமைகள் பேரவையின் லத்தீன் அமெரிக்க வலய குழு மற்றும் கண்காணிப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு, மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி மஹிந்த சமரசிங்க நேற்று (11) தெளிவுபடுத்தினார்.

பல்வேறு துறைசார் செயற்பாடுகளின் ஊடாக, இலங்கை பெற்றுக்கொண்டுள்ள மகிழ்ச்சிகரமான முன்னேற்றம், ஏற்றுக் கொள்ளப்பட்ட கண்காணிப்பு முறை மூலம் சர்வதேச தலையீடுகளுக்காக சில நாடுகள் தற்போது முன்வைக்கின்ற பொருத்தமற்ற யோசனைகள் பிரச்சினையைத் தோற்றுவிப்பதாகவும் அமைச்சர் உள்ளடங்கிய பிரதிநிதிகள் தெளிவுபடுத்தினர்.

அது பலவந்தமானது மாத்திரமன்றி, தேவையற்ற ஒன்றெனவும் குறித்த பிரதிநிதிகள் குழுவிற்கு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் ஜெனிவாவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவும் இந்த சந்தர்ப்பத்தில் பங்கேற்றிருந்தார்.

No comments

Powered by Blogger.