Header Ads



முஸ்லிம் நாடுகள் ஜனாதிபதியுடன் கோபிக்கப் போவதில்லை - பைசர் முஸ்தபா

கிழக்கு மாகாண சபையிலிருந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விலகினாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. காரணம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனேயே இருக்கின்றனர் என்று முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது முஸ்லிம் சமூகம் அல்ல என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றேன். அந்தக் கட்சி நவநீதம் பிள்ளைக்கு அறிக்கை சமர்ப்பித்தது என்பதற்காக முஸ்லிம் நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகள் ஜனாதிபதியுடன் கோபிக்கப்போவதில்லை என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

தேர்தல் காலத்தில் அரசாங்கத்தை விமர்சித்து வாக்குகளை பெறும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது தேர்தல் முடிந்ததும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளும் என்றும் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா கூறினார்.

கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

முஸ்லிம் நாடுகள் ஜனாதிபதியுடன் உள்ளன

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது இந்த நாட்டின் முஸ்லிம் சமூகம் அல்ல என்பதனை நான் தெளிவாக குறிப்பிடுகின்றேன். அந்தக் கட்சி நவநீதம் பிள்ளைக்கு அறிக்கை சமர்ப்பித்ததுள்ளது. ஆனால் அவ்வாறு அறிக்கை சமர்ப்பித்தது என்பதற்காக முஸ்லிம் நாடுகள் ஜனாதிபதியுடன் கோபிக்கப் போவதில்லை. அண்மையில் நான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றிருந்தபோது முஸ்லிம் நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருக்கமாக இருப்பதை உறுதிபடுத்தின.

கேள்வி கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் விலகினால் என்ன நடக்கும்?

கிழக்கு உறுப்பினர்கள் எம்முடன் உள்ளனர்

பதில் கிழக்கு மாகாண சபையிலிருந்து அந்தக் கட்சி விலகினாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. காரணம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் யாவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனேயே இருக்கின்றனர். கிழக்கு மாகாண சபை பிரதிநிதிகள் பிரதேச மக்களின் நலனுக்காகவே செயற்படுவார்கள். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையானது 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் 2010 ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவே செயற்பட்டது. தேர்தல் முடிந்ததும் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டனர்.

கொழும்பில் வெற்றிபெறுவோம்

மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு நகரில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டும். மத்திய கொழும்பின் அமைப்பாளர் என்றவகையில் மத்திய கொழும்பின் வெற்றியை என்னால் உறுதியாக கூற முடியும். கொழும்பில் சேறிப்புறங்களில் வாழ்கின்ற 80000 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்கும் பாரிய வேலைத்திட்டங்களை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. அந்தத் திட்டத்தை பலர் விமர்சித்துவருகின்றனர்.

இனவாதம் பேசி வாக்குகளை பெற முயற்சி

அத்துடன் தேர்தல் காலத்தில் சில கட்சிகள் கொழும்பு மாவட்டத்தில் இனவாதத்தை பரப்பி வாக்குகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்று கொழும்பில் தனித்து போட்டியிடுவதுடன் அரசாங்கத்தை விமர்சித்து இனவாதத்தை பரப்பி வருகின்றது.

3 comments:

  1. 100% CORRECT ...! பர்மாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் உயிருடன் எரிக்கப்பட்டபோதும் கூட நீங்கள் கூறும் அந்த 'முஸ்லீம் நாடுகள்' அமைதியையே கடைபிடித்தார்கள். அது மட்டுமா..... அன்மையில் எகிப்தில் முஸ்லீம்கள் முஸ்லீம் இரானுவத்தால் கொலைசெய்யப்பட்டபோது அதற்கும் இந்த 'அறபு நாடுகள்' அமைதியாக இருந்து 'ஆதரவு' கொடுத்தார்கள். இலங்கை விடயத்தில் நீங்கள் அவர்களிடத்தில் எதிர்பார்ப்பதும் அதுவே......!!!

    ReplyDelete
  2. முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைவரையும் விமர்சித்து பிழைப்பதே அவர்களின் கோழைத்தனம்... மாற்றமாக அனைவரும் சேர்ந்து ஒன்றுபட்டு வேறு தலைமையின்கீழ் ஒன்றுபட்டால் இவர்களை போற்றமுடியும், ஆனால் இவர்களின் கருத்துக்கள் இவர்களின் சுயனலவாதத்தையே பிரதிபலிக்கிறது.
    சுருக்கமாக சொன்னால் இவர்கள் அனைவரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையாக வேண்டும்...

    ReplyDelete
  3. DEAR MOHAMED iBRAHIM, மார்க்க ரீதியாக ஒற்றுமைப்பட முடியாத எம்மவர்கள் அரசியல் ரீதியாக 'கனவில்' கூட ஒன்றுபட சாத்தியமில்லை. காரணம் அனைத்தும் 'சுயநலத்துக்காவே.....!

    ReplyDelete

Powered by Blogger.