Header Ads



முல்லைத்தீவு முஸ்லிம்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் ஹுனைஸ் பாரூக் எம்.பி

(றிப்கான் கே. சமான்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்;கள் அணுபவித்துவரும் பிரச்சிணைகள் பற்றி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் கேட்டறிந்து கொண்டார்.

முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த ஹுனைஸ் பாரூக்  அங்கு மீள்குடியேறியுள்ள மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சிணைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று ஆகிய கிராமங்களில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் காணி, வீடு உள்ளிட்ட பல பிரச்சிணைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதே வேலை தண்ணீரூற்று முஸ்லிம் வத்தியாலயத்திற்கும் சென்று பார்வையிட்டார்.

இந்த பிரச்சிணைகள் பற்றி உரிய அதிகாரிகளுடன் போசி வெகு விரைவில் உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் இதன்போது தெரிவித்தார்.

முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி  கிழக்கு பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்நிப்பின் போதே பாராளுமன்ற  உறுப்பினர் மேற்படி விடயத்தைக் கூறியிருந்தார்.


No comments

Powered by Blogger.