Header Ads



மாயமான மலேசிய விமானத்தில் கணவன் - திருமண மோதிரம் மனைவியிடம் (நெஞ்சை நெருடும் நிகழ்வு)


(tn) கோலாலம்பு+ரில் இருந்து பீஜங் செல்லும் வழியில் காணமல்போய் இன்றுவரை மர்மமாக இருக் கும் மலேசிய விமானத்தில் பயணித்த இரு குழ ந்தைகளின் தந்தை பயணத்திற்கு முன்னர் கடைசியாக விடைபெறுவது போல் தனது திருமண மோதிரம் மற்றும் கைக்கடிகாரத்தை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு சென்றுள்ளார். 

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரைச் சேர்ந்த 39 வயது இயந்திர பொறியியலாளரான போல் வீக்ஸ் மங்கோலிய நாட்டில் தொழில் வாய் ப்பை பெறவே மலேசிய விமானத்தில் பயணித்திருக்கிறார். தனது கணவர் விடைபெற்றுச் செல்லும் முன் உடைமைகளை கொடுத்துச் சென்றதை அவரது மனைவி டெனிக்கா விபரித்துள்ளார்.

எனினும் அவர் பற்றி ஒரு நல்ல செய்தி கிடைக்க ஓர் அதிசயத்திற்கு தாம் பிரார்த்திப்பதாக டெனிக்கா குறிப் பிட்டிருக்கிறார். "எனக்கு ஏதாவது நடந்தால் திருமண மோதிரத்தை மூத்த மகனின் திருமணத்திற்கு கொடுக்க வேண்டும். எனது கைக்கடிகாரம் இளைய மகனுக்கு கொடுக்க வேண்டும்" என்று போல் வீக்ஸ் பயணத்திற்கு முன் குறிப் பிட்டதாக மனைவி டெனிக்கா '9 நியுஸ் ந'னல்' தொலைக்காட் சிக்கு குறிப்பிட்டுள்ளார். 

நியு+ஸிலாந்தில் பிறந்த முன்னாள் இராணுவ வீரரான போல் வீக்ஸ், கிரைஸ்சேர்ச்சில் இடம்பெற்ற மோசமான பு+மியதிர்ச்சி யில் தனது வீடு சேதமானதை அடுத்து அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

இந்த தம்பதிக்கு மூன்று வயதில் லின்கன் என்ற மகனும் 11 மாதம் கொண்ட ஜக் என்ற மகனும் உள்ளனர். தனக்கு மங்கோலியாவில் வேலை கிடைத்ததும் ஒரு வாரத்திற்கு முன் குடும்பத்தினருடன் அதிக புகைப்படங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மனைவியிடம் கூறியிருக்கிறார்.

"என்னால் எதிர்பார்ப்பை இழக்க முடியவில்லை. அந்த கதவை தாண்டி அவர் ஒருமுறை வருவதை நான் பார்க்க வேண்டும். அவர் வீட்டின் எல்லா இடங்களிலும் இருப்பதை நான் பார்க்க வேண்டும்." என்று மனைவி கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.

1 comment:

  1. உங்களின் அழுகை,வேதனை எங்களையும் நனையவைக்கிறது தாயே. எது நடந்திடினும்,கடவுள் சிறந்த பிரதிபலனை உங்கள் அனைவருக்கும் கொடுத்திடுவார்.நாங்களும் பிரார்த்தித்தவர்களாகவே உள்ளோம்.

    ReplyDelete

Powered by Blogger.