மேல், தென் மாகாண தேர்தல் - கட்சிகளின் வெற்றி வாய்ப்புக்கள் பற்றிய ஒரு மதிப்பீடு..!
(நஜீப் பின் கபூர்)
இன்னும் இரு வாரங்களில் நடைபெற இருக்கின்ற மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. என்றாலும் ஆளும் தரப்பிற்கு வலுவான ஒரு போட்டியை கொடுக்க முடியாத நிலையில் பிரதான எதிர்க் கட்சி இருந்து வருகின்றது. இன்று அந்தக் கட்சி பசுமைப் புரட்சி என்ற பெயரில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கின்றது.
அந்த கட்சி தேர்தல் தொடர்பாக நடத்தி வருகின்ற கூட்டங்களில் அதன் தலைவர்களான ரணில், திஸ்ஸ அத்த நாயக்க, கரு ஜயசூரிய போன்றவர்கள் வந்தாலும் ஆதரவாளர்களின் வரவு மிகவும் கம்மியாக இருந்து வருகின்றது. அவர்களுடன் பின்னால் திரிகின்ற கூட்டத்தினர்தான் சில வாகானங்களில் வந்து பார்வையாளர்களாகவும் இருந்து வருகின்றனர். சில சமயங்களில் மேடையில் அமர்ந்திருக்கின்றவர்களை விட பார்வையாளர்களாக கூட்டத்தில் அமர்ந்திருக்கினற்வர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதாக ஆளும் தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரங்களை நையாண்டி பண்ணுகின்றார்கள்.
ரணில் விசுவாசியான ஐ.தே.க. தலைமை வேட்பாளர் அனுராதாவுக்கு வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் அனுராதபுரத்தில்;கொடுத்தது போன்று ஐக்கிய தேசியக் கட்சி ரணில் ஆதரவு வேட்பாளர்ளை தோல்வியடைச் செய்வதற்கான வேலைத் திட்டமொன்றை அந்தக் கட்சியின் கிளர்ச்சிக்காரர்ளினால் முன்னெடுக்கப்படுவதுடன், தெற்கு ஹம்பாந்தோட்டையில் சஜீத் பிரேமதாச முன்னெடுத்துச் செல்கின்ற பிரசாரப் பணிகளை குழப்பியடிப்பதற்கும் ரணில் விசுவாகிகள் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் மைத்திரி, சிரிலால் தரப்பு குற்றம் சாட்டி வருகின்றது. எனவே தலைமைத்துவச் சண்டை இத்தேர்தலிலும் பிரதி பலித்து வருகின்றது.
இப்படி தனக்குள்லேயே அந்தக் கட்சி இந்தத் தேர்தலில் உட்கட்சிப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதாலும் கட்சித் தலைவர் ரணில் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவும் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள் இந்த முறை தமது வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகப் பாவிப்பதற்கும் தீர்மானம் எடுத்திருப்பதாகத் தெரிகின்றது.
இந்தப் பின்னணியில் நடைபெறுகின்ற தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பதனை நமது வாசகர்களுக்கு அறித்தருவதுடன், கடந்த தேர்தலில் கட்சி பெற்ற வாக்குகளையும் அதற்கான உறுபப்பினர் எண்ணிகையும் இங்கு பார்வைக்காகத் தருகின்றோம்.
2009 தேர்தல் முடிவுகள் மேல் மாகாண சபை
கட்சி வாக்குகள் ஆசனம்
ஐ.ம.சு.மு 1506115 68
ஐ.தே.க. 0688253 30
ஜே.வி.பி. 0056384 03
ஸ்ரீ.ல.மு.கா 0049388 01
ஜ.ஐ.மு. 0011970 01
2009 தேர்தல் முடிவுகள் தென் மாகாண சபை
ஐ.ம.சு.மு 804071 38
ஐ.தே.க. 297180 14
ஜே.வி.பி. 072379 03
2014 தேர்தல் முடிவுகள் மேல் மாகாண சபை
கட்சி ஆசனங்கள்
ஐ.ம.சு.மு 60 முதல் 65
ஐ.தே.க. 20 முதல 25;
பொன்சேக்கதரப்பு 07 முதல் 09
ஜே.வி.பி. 03 முதல் 05
மனோதரப்பு 02 முதல் 03
ஸ்ரீ.ல.மு.கா 00 முதல் 02
ம.காங்கிஸை;.ரிசாட் தரப்பு 00 முதல் 01
இதர 00 முதல் 02
2014 தேர்தல் முடிவுகள் தென் மாகாண சபை
ஐ.ம.சு.மு 32 முதல் 35
ஐ.தே.க. 08 முதல் 10
பொன்சேக்க தரப்பு 05 முதல் 07
ஜே.வி.பி. 03 முதல் 05

Post a Comment