தனியார் மருத்துவ நிறுவனங்களில் சுகாதார சேவையைப் பெறும்போது அவற்றின் தரத்தை உறுதிப்படுத்துங்கள்..!
(எம்.எம்.ஏ.ஸமட்)
தனியார் மருத்துவ நிறுவனங்களில் சுகாதார சேவையைப் பெற்றுக்கொள்ளும்போது அவற்றின் தரம் தொடர்பில் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பொது மக்களை சுகாதார அமைச்சு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளதாவது,
தனியார் மருத்துவ நிறுவனங்களில் சுகாதார சேவையைப் பெற்றுக்கொள்ளும்போது அந்நிறுவனம் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபையினால் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் பெற்ற நிறுவனம் என்பதை உறுபடுத்திக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தனியார் வைத்தியசாலைகள், தாதியர் இல்லங்கள், மகப்பேற்று மனைகள் உட்பட மருத்துவ மற்றும் சுகாதார சேவையுடன் தொடர்புடைய சகல நிறுவனங்களும் தனியார் மருத்துவ நிலையப் பதிவுச் சட்டத்திற்கமைய தனியார் மருத்து சுகாதார சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபையில் பதிவு செய்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை, சகல மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், கொழும்பு 8ல் உள்ள தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்கு படுத்தும் சபை மற்றும் தனியார் சுகாதார சேவைகள் திணைக்களம் என்பவற்றில் பெற்றுக்கொள்ள முடிவதுடன் இந்நிறுவனங்களின் இணையத் தளங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
.jpg)
Post a Comment