வடமாகாணத்தில் இராணுவத்திற்கு யுவதிகள் வற்புறுத்தி இணைக்கப்படவில்லை - ஹூனைஸ் பாறுக் எம்.பி.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
இராணுவத்திற்கு வடமாகாண யுவதிகள் வற்புறுத்தி இணைக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பால் கூறப்படும் கருத்துக்களை முற்றாக நிராகரிப்பதாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் தெரிவிக்கின்றார்.
கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட சமாதானக் காலத்தில் வடகிழக்கில் அரசாங்கத்தால் பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களிலும் அரசு முழு மூச்சாக நின்று பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அக்கறை செலுத்திவதாகவும் தெரிவித்த ஹூனைஸ் எம்.பி சமாதானத்தின் பின்னர் தமிழ் மக்கள் அரச உத்தியோகங்களில் புறக்கணிக்கப்படுவதாக கூட்டமைப்பு பிரச்சாரங்களைச் செய்து வருகின்றது என்றும் தெரிவித்தார்.
எனினும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி யுவதிகள் தமது வாழ்வாதாரத்தின் அடிப்படையில் தமது சுய விருப்பத்திலேயே இராணுவத்தில் இணைவதாகவும் எந்தவொரு தமிழ் யுவதியையும் கட்டாயப்படுத்தியோ அல்லது வற்புறுத்தியோ இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் அவ்வாறு கட்டாயத்தில் இணைக்கப்பட்டால் அவர்கள் இடையிலேயே விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள் என்றும் சுய விருப்பத்தில் இராணுவத்தில் இணைந்து தமது குடும்பச் சுமையை போக்குவதை தடுத்து அவர்களை தொழில் ரீதியாக முடக்குவதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கையாகவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் பெண்களை சேர்த்த நீங்கள்,ஏன் தமிழ் ஆண்களை சேர்க்கவில்லை என்றே அவர்கள் கேட்கிறார்கள். என்ன பதில்?
ReplyDeleteஎல்லா தமிழ் சேர்ப்புக்களும் தமிழர்களின் எதிர்கால இயக்கப்போரட்டங்களுக்கு உதவியாகவே இருக்கும்,இதை யுத்தம் வரை புறிந்துகொண்ட இலங்கை சிங்கள அரசுகள்,இப்போ மறந்துவிட்டது.