Header Ads



நாட்டில் மத நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது, அரசை விட்டு வெளியேற விரும்புவோரை தடுக்கவும் இல்லை - ஜனாதிபதி மஹிந்த

நாட்டில் மத நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மத நல்லிணக்கம் தொடர்பில் விமர்சனம் செய்யும் தரப்பினர், இலங்கையின் மத நல்லிணக்கம் பற்றி நேரில் வந்து பார்வையிட்டுக்கொள்ள முடியும்.

காலி மைதானத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக போர் நடத்தப்படதே தவிர தமிழர்களுக்கு எதிராக அல்ல. மக்களின் இதயங்களை வென்றெடுப்பதே எமது நோக்கமாகும். நாட்டில் பிரச்சினைகளை தீர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

எனினும், சில ராஜதந்திரிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பிரச்சினை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தை விட்ட எவரையும் விலக்க திட்டமில்லை. எனினும், அரசாங்கத்தை விட்டு வெளியேற விரும்புவோரை தடுக்கவும் இல்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


2 comments:

  1. மத நல்லினக்கம் என்றலாம் என்ன என்று தெறியாமல் தலைவர் பேசுகிறார்.இந்துகோயில்களும்,முஸ்லிம் பள்ளிவாயல்களும்,கிறிஸ்தவ தேவாலயங்களும் உடைக்கப்படுவதா மத நல்லினக்கம்?

    நாட்டில் பிரச்சினைகளை தீர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றால் ஏன் நாட்டில் பிரச்சினைகளை வளர்க்கிறீர்கள்?

    யுத்தம்/பயங்கரவாதம் இருந்த காலத்தில்கூட நின்மதியற்ற வாழ்க்கை இப்படி மக்களுக்கு இருந்ததில்லை.அப்போதெல்லாம் பிரச்சினை,புலிகளுக்கும் அரசுக்கும்தான்.ஆனால் இப்போ,எல்லோருக்கும் எல்லாப்பிரச்சினையும் வந்துள்ளது.

    ஆட்சிக்கு தகுதியற்றவரே நீங்கள்,உங்களோடு இருப்பவர்களும் அவ்வாரே.ஜனனாயகத்தில் இந்த ஆட்சியில்லை,மாராக சர்வாதிகாரத்தில்,பலாத்காரத்தில்.திருட்டு வாக்குகள்.அனைவருக்கும் இது தெறியும்.

    ReplyDelete

Powered by Blogger.