Header Ads



சிறுபான்மையினரின் வழிபாட்டுதல தாக்குதல்களே ராஜபக்ச அரசுக்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டு - சந்திரிகா


அனைத்துலக அழுத்தங்களின் பாதிப்புகளில் இருந்து உண்மையிலேயே மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கருதினால், ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், 

வெளியாரின் தலையீடுகளை தடுக்க வேண்டும் என்றால், ராஜபக்ச அரசாங்கம், சட்டத்தின ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும்.  தற்போது சிறிலங்காவில் அதற்கு மரியாதை இல்லை. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில், சிறிலங்கா மீது கொடுக்கப்படும் தேவையற்ற அழுத்தங்களில் இருந்து தப்பிக்க இலகுவான வழி உள்ளது. 

நல்லாட்சியை ஏற்படுத்தல், மனிதஉரிமைகளை பாதுகாத்தல், அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றுதல் ஆகியனவே அவை. 

சிறுபான்மை மதத்தினரின் வழிபாட்டு இடங்கள் மீது தொடர்ச்சியாக நடக்கின்ற தாக்குதல்கள் ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில் முக்கியமான ஒரு குற்றச்சாட்டாக சுமத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.