சந்திரிக்காவினதும், ரவூப் ஹக்கீமினதும் உண்மையான செயற்பாடுகளை வெளியிடுவோம் - ஞானசார தேரர்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் உண்மையான செயற்பாடுகளை இன்று வெளியிடப் போவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சந்திரிக்கா அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணத்தை பெற்று வெளியில் இறங்கியுள்ளார். விசேட ஊடக சந்திப்பை நடத்தி உண்மைகளை நாம் வெளியிடுவோம். சந்திரிக்காவினால் முன்னர் செய்ய முடியாததை தற்போது செய்ய முனைவது பற்றி நாம் கூறுவோம்.
அதேபோல் ஹக்கீமின் விடயங்கள் பற்றியும் நாம் வெளியிடுவோம். ஜெனிவா போன்ற பிரச்சினைகள் காரணமாக நாங்கள் வாயை மூடிக் கொண்டிருக்கின்றோம் என்றார்.
முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான நிறுவனம் ஒன்று இலங்கையில் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்துவது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பௌத்தம் அல்லது இஸ்லாம், கிறிஸ்தவ மத வழிப்பாட்டுத் தலங்கள் மீது இனந்தெரியாத குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்லாது இஸ்லாம் வழிப்பாட்டுத் தலங்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள், முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் அண்மையில் அறிக்கை ஒன்றை கையளித்திருந்தது.
இந்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாக கொண்டே ஞானசார தேரர் மேற்படி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
.jpg)
போடா பைத்தியக்காறா உன்னைப்போல முன் பின் முறண்பாட்டுடன் பேசும் குடிகாரர்களின் பேச்சை இப்போது யாரும் கேட்கத்தயாரில்லை என்பது கூட உனக்குத்தெரியாத அளவுக்கு நீ வடி கட்டிய முட்டாளாக இருக்கின்றாயே.. உன்னை யார் வைத்துக்கொண்டு இயக்குகின்றார்கள், நீ தற்போத் வாய் மூடிக்கொண்டிருக்கின்றாய் என்பதை நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள். அத்துடன் சந்திரிகா அம்மையாரின் பேச்சு தேர்தல் காலத்தில் எடுபட்டு எதிர்கட்சிகளோ அல்லது மாற்றுக் கட்சிகளோ வாக்குகளை பெற்று விடக்கூடாது என்பதற்காக உம்மை தற்போது அவசரமாக வெளியிறக்கி உள்ளார்கள்.
ReplyDeleteவந்துட்டய்யா.... வந்துட்டா........ !!! மீடியாக்களுக்கெல்லாம் இனிப்பு கிடைத்தமாதிரிதான்.....!! நம்ம தலைவர் ரவுப் ஹக்கீம் சார் தான் என்ன செய்யப்போகிராறோ....
ReplyDelete'நோன்பு மாதத்தில் சைத்தானைக் கட்டிவைப்பது போல பொது பல சேனவை -ஜெனீவா- கட்டிப்போட்டுள்ளது' என்று தேர்தல் கூட்டத்தில் 'காமடியாக' பேசிய ரவுப் ஹக்கீம் சார் இவர்கள்.... பாவம் !! இப்போது 'தவலை கெட்டது தன் வாயால்தான்' என்று தன்னைத்தானே புழம்பிக்கொள்கிறாரோ..... !!
வந்துட்டய்யா.... வந்துட்டா........ !!! மீடியாக்களுக்கெல்லாம் இனிப்பு கிடைத்தமாதிரிதான்.....!! நம்ம தலைவர் ரவுப் ஹக்கீம் சார் தான் என்ன செய்யப்போகிராறோ....
ReplyDelete'நோன்பு மாதத்தில் சைத்தானைக் கட்டிவைப்பது போல பொது பல சேனவை -ஜெனீவா- கட்டிப்போட்டுள்ளது' என்று தேர்தல் கூட்டத்தில் 'காமடியாக' பேசிய ரவுப் ஹக்கீம் சார் இவர்கள்.... பாவம் !! இப்போது 'தவலை கெட்டது தன் வாயால்தான்' என்று தன்னைத்தானே புழம்பிக்கொள்கிறாரோ..... !!
itatku mun ettanayo teraikal wandu pooi vittatu allah mihaperiyavan endru
ReplyDeleteivarhalukku eppadi puriyum kandippa allah puriya waipan TERAIHALUKKU
WAINAL THAN SAWU ENPATU PURIYAMAL ILLAI MUTTAL GHANA
SOMAWUKKU ENNA NADANDATO ATE KATITAN