சவூதி அரேபிய 60 வயது முதியவரின் அழகிய முன்மாதிரி..!
தமிழ் திரைப்படங்களுக்கு கதை தேடி அலையும் தயாரிப்பாளர்களுக்கு தீனி அளிக்கக் கூடிய வகையில் சவுதி அரேபியா நாட்டில் சுவாரஸ்யமான சுயம்வர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
சவுதியில் வாழும் ஒருவர் தனது குடும்ப செலவினங்களுக்காக ஒரு பணக்காரரிடம் இருந்து சிறுகச் சிறுக சுமார் 30 லட்சம் ரியால்களை கடனாக வாங்கியிருந்தார்.
நீண்ட காலம் ஆகியும் வாங்கியவர் பணத்தை திருப்பி செலுத்தாததால் வெறுத்துப் போன பணக்காரர், போலீசில் புகார் அளித்தார். அந்நாட்டின் சட்டத்தின்படி, இது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் கடனை அடைக்கும் வரை பிரதிவாதியை சிறையில் அடைக்க நேரிடும்.
குடும்பக் கடனை அடைக்க முடியாமல் பெற்ற தந்தை சிறையில் வாடப் போவதை அன்றாடம் நினைத்து, நினைத்து அழுது தவித்த ஒரே மகள், அவரை தண்டனையில் இருந்து மீட்பதற்காக தனது இளமையை தியாகம் செய்ய தீர்மானித்தார்.
கடன் கொடுத்த 60 வயது முதியவரை இருபதே வயதான அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என் தந்தை மீதான கடனை தள்ளுபடி செய்தால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன். அந்த பணத்தை எனக்கு தந்த வரதட்சணையாக (அரபு நாட்டு வழக்கப்படி) கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்தார்.
தனது வீட்டுக்கு வந்து, திருமணம் செய்து அழைத்து செல்லும்படி கூறிய அந்த பெண், அதற்கான ஏற்பாடுகளையும் துரிதமாக செய்தார். திருமணப் பதிவாளரை (இமாம்) வீட்டுக்கு வரவழைத்த அவர் மணமகனின் வரவுக்காக வழி மீது விழி வைத்து காத்திருந்தார்.
சொன்ன நேரத்திற்கு சரியாக வந்த ‘மாப்பிள்ளை’ அந்த இளம் பெண்ணுடன் சுமார் ஒரு மணி நேரம் தனியாக பேசினார். தனக்கு ஏற்கனவே 3 மனைவியர் இருப்பதாக அவர் கூறியபோது, ‘நான்காவதாக ஒரு ஓரத்தில் இருந்து கொள்கிறேன். கடனில் இருந்து என் தந்தையை விடுவித்தால் போதும்’ என்று கெஞ்சினார்.
ஒரு முடிவுடன் வழக்கறிஞருடன் வந்திருந்த முதியவர், தான் வழங்கிய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அத்துடன் மேலும் 3 லட்சம் திர்ஹம் ‘செக்’கை எழுதி கையொப்பமிட்டு அவர் அந்த பெண்ணிடன் அளித்தார். ‘இதை என்னுடைய திருமண சீதனமாக ஏற்றுக்கொள். உன் வயதுக்கு ஏற்ற ஒரு வாலிபரை திருமணம் செய்து கொண்டு நீ மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்’ என ஆசீர்வதித்து விட்டு சென்றார்.
தந்தையை பிரிய விரும்பாமல் முதியவரான தன்னை திருமணம் செய்துக் கொள்ள முன்வந்த அந்த இளம்பெண்ணின் குடும்பப் பாசத்தையும், தியாகத்தையும் மெச்சிப் பாராட்டிய அவர், மீண்டும் இதைப் போன்ற முடிவுக்கு நீ சென்று விடக் கூடாது என்று எச்சரித்து விட்டும் சென்றார்.
இந்திய மதிப்புக்கு சுமார் 5 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததுடன், கடன்காரரின் மகளுக்கு மேலும் 5 கோடி ரூபாயை திருமண அன்பளிப்பாக வழங்கிய அந்த முதியவரின் தயாள குணம், விரைவில் எந்த தமிழ் படத்திலாவது, திரைக்கதையின் மையக்கருவாக இடம் பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
.jpg)
கடவுளே,இது உண்மையா இல்லை இதுவும் சினிமாவா?ரொம்ப ஆச்சரியமான நிகழ்வு,மனதை அப்படியே வருடிச்சென்றுள்ளது.இது உண்மையில் சினிமாக்காரர்களுக்கு மிக அழகிய கதை,நிச்சயம் வெற்றி கிடைக்கும்,இரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் மூன்றாம் பிறையைப்போல.
ReplyDeleteஎல்லாமிருக்க,முஸ்லிம்களில்,ஆண்கள்தான் சீதனம் கொடுப்பார்களா?ரொம்ப மாறுதலான கலாச்சாரமே! ஆனால் எனக்கு தெறிந்தளவில் இலங்கை,இந்திய முஸ்லிம்களில் ஆண்கள்தான் பெண்களிடமிருந்து சீதனம் வாங்குகிறார்கள்,எது சரி அல்லது மிகச்சரி?இரண்டுமே சரியாகாது.இஸ்லாமிய மதத்தைப்பற்றி நன்கு தெறிந்தவர்கள் சொல்லலாமே?
just one correction வரதட்சனியஹ (அரபு நாட்டு வழக்குப்படி) that is not only Arabic tradition that is part of Islamic law so change it to (இஸ்லாமிய சட்டப்படி)
ReplyDelete@mohan kokila,இஸ்லாமிய குடும்ப அமைப்பில் குடும்பத்துக்கான
ReplyDeleteமுழுமையான பராமரிப்பு செலகவீனங்களையும் வழங்கவேண்டியது ஆணின்மீது கடமையாகிரது அதனால்தான் இஸ்லாமிய வாரிசுறிமை
சட்டத்திலும் ஆண்களுக்கு முக்கியத்துவம் அழிக்கப்படுகிறது.
மன்னிக்கவும் இங்கு எல்லம் தலைகீழாக நடக்கிறது
சகோதரி உண்மைதான் இஸ்லாதில் ஆண்கள்தான் பெண்களுக்கு சீதனம் [மஹர்] கொடுக்க வேண்டும்.முஸ்லீம் பெயரில் [இந்தியா,இலங்கையில்] பகல் கொல்லை அடிக்கிரார்கள் இவர்கலை கெளரவ பிச்சைக்காரர்கள்,கையாலாகாதவர்கள்,மொத்தத்தில் கரம் பிடித்த பெண்னை காப்பாற்ற வக்கில்லாதவனுகாள்,இஸ்லாத்தைப்பாருங்கள் முஸ்லீம்கலைப் பார்க்க வேண்டாம்.மனிதனால் மனிதநுக்கு வலிகாட்டமுடியாது மனிதானைப் படைத்தவன்தான் முஸ்லீம்கலுக்கும் முழு மனிதர்கலுக்கும் வலிகாட்டி இருக்கிரான் எனவே இஸ்லாத்தைப் படியுங்கள் உங்கள் வாழ்க்கைக்கு வலிகாட்டல் கிடைக்கும். இன்ஸாஅல்லாஹ்.
ReplyDeleteசகோதரி உண்மைதான் இஸ்லாதில் ஆண்கள்தான் பெண்களுக்கு சீதனம் [மஹர்] கொடுக்க வேண்டும்.முஸ்லீம் பெயரில் [இந்தியா,இலங்கையில்] பகல் கொல்லை அடிக்கிரார்கள் இவர்கலை கெளரவ பிச்சைக்காரர்கள்,கையாலாகாதவர்கள்,மொத்தத்தில் கரம் பிடித்த பெண்னை காப்பாற்ற வக்கில்லாதவனுகாள்,இஸ்லாத்தைப்பாருங்கள் முஸ்லீம்கலைப் பார்க்க வேண்டாம்.மனிதனால் மனிதநுக்கு வலிகாட்டமுடியாது மனிதானைப் படைத்தவன்தான் முஸ்லீம்கலுக்கும் முழு மனிதர்கலுக்கும் வலிகாட்டி இருக்கிரான் எனவே இஸ்லாத்தைப் படியுங்கள் உங்கள் வாழ்க்கைக்கு வலிகாட்டல் கிடைக்கும். இன்ஸாஅல்லாஹ்.
ReplyDeleteMrs Mohan Kokila:
ReplyDeletekokilavin kealvikku badil: islamiya markkaththil aankalthan pennuku dowry(mahr)thohai kodukka wendum.india ilangai ponra naaduhalil islaththitku muranaha silar seihiranar, adu awargalin thawaru.indu madaththilum kooda mutkaalaththil aangal than dowry koduthtu marreige seithaargal but ippodu adu illamalahivittadu
Dear Kokila:
ReplyDeleteஇஸ்லாம் கூறியிருக்கின்ற, அறிமுகப் படுத்தியிருக்கின்ற முறையானது: "திருமணத்தின் போது ஆண்களே பெண்களை தனது ஆகுமான வாழ்க்கைத் துணைவிகளாகக் கொள்வதற்கு ஒரு பொருளை (பணமாகவோ அல்லது வேறு எதுவாகவோ) அவசியம் கொடுக்குமாறு பணித்துள்ளது.
உண்மையில் இது வரதட்சனை இல்லை.. மாறாக அரபுமொழியில் "மஹர்" என்று கூறுவர்...
திருமோகன் அவர்களே இது அரபு நாட்டு சட்டம் இல்லை.இது இஸ்லாம் மதத்திநுடைய சட்டம்.
ReplyDeleteஇலங்கையில் உள்ள முஸ்லிம்களும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் இதை பற்றி வாய் திறக்கமாட்டார்ஹல் அதிலும் இலங்கையில் கிழக்கில் ரெம்பமோசம் {ஒருசிலபேரை}தவிர,
ReplyDelete