இந்தியருக்கு 43 மில்லியன ரியால் இழப்பீடு வழங்குமாறு சவூதி அரேபியருக்கு உத்தரவு
ஜெத்தா பொது நீதிமன்றம் நேற்று 12-03-2014 வெளியிட்ட தீர்ப்பொன்றில் இந்திய முதலீட்டாளர் ஒருவருக்கு ஐந்து நாள்களுக்குள் 43 மில்லியன்
ரியால்களை வழங்கிட வேண்டுமென்று சவூதி அரேபியர் ஒருவருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜெத்தா நீதிமன்றத்தின் ஆறாம் செயல்வட்ட நீதிபதி சாமி அல் அதீக் சவூதி காவல்துறைக்கு அளித்த உத்தரவில் குறிப்பிட்ட சவூதியர் விரைந்து இந்தத் தொகையைச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
தவறினால், சவூதி சட்ட விதிகள் 46,83, மற்றும் 88 இன் கீழ் பயணத் தடை, ஆவண முடக்கம், சொத்து முடக்கம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளார்.
குறிப்பிட்ட இந்திய முதலீட்டாளருக்கான வழக்குரைஞர் சுலைமான் அல் ஹூனைனி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment