கட்டட இடிபாடுகளில் இருந்து 10 மாத குழந்தையை மீட்ட காட்டு யானை
இந்தியா - மேற்கு வங்க மாநிலம் புருளியாவில் காட்டில் இருந்து மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு வந்த ஆண் யானை ஒன்று, வீட்டின் சுவர்களை இடித்துத் தள்ளி அட்டூழியத்தில் ஈடுபட்டது.
அப்போது, தான் இடித்த வீட்டுக்குள் இருந்து குழந்தையின் அழுகுரலைக் கேட்ட யானை, உடனடியாக இடிபாடுகளை தனது தும்பிக்கையால் தூக்கிப் போட்டு, இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 10 மாதக் குழந்தையை, எந்த பாதிப்பும் இல்லாமல் மீட்டு வெளியே போட்டுவிட்டு, எந்த சலனமும் இல்லாமல் காட்டுக்குள் மீண்டும் சென்றது.
கடந்த ஆண்டு சுமார் 3 பேரை மிதித்துக் கொன்ற இந்த காட்டு யானை, 10 மாதக் குழந்தையைக் கனிவோடு மீட்ட காட்சியை நேரில் பார்த்த கிராமத்தினர் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Post a Comment