Header Ads



கல்முனை சாஹிராக் கல்லூரியில் ஆசிரியர், மாணவரால் தாக்கப்பட்டார்

(அபூ தகீ ஹம்த்)

கல்முனை சாஹிராக் கல்லூரியில் மாணவர் இருவர் ஆசிரியரைத் தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று புதன்கிழமை 12.03.2014 காலை இடம்பெற்றுள்ளது. 

உயர்;தரவகுப்பில் கணிதப்பிரிவில் பயிலும் மாணவர் அன்றைய தினம் பாடசாலைக்குத் தாமதமாக வந்ததன் காரணமாக பாடசாலையின் ஒழுக்காற்று சபையின்; நடைமுறை ஒழுங்கின்படி குறிப்பிட்ட ஆசிரியர் அம்மாணவரை சுத்தப்படுத்தும் பணியொன்றை செய்யும்படி வேண்டியிருக்கிறார். அதனை ஏற்க மறுத்த மாணவன் ஆசிரியரை எதிர்த்துப் பேசி கோபப்படுத்தியிருக்கிறார். மாணவனின் தகாத செயலைக் கண்ட ஆசிரியர் மாணவனின் பேச்சை அடக்க சற்று சத்தமாகவும் பயம்கொள்ளச் செய்யும் விதத்திலும் நடந்துகொண்டிருக்கிறார்.  

இதனால் ஆசிரியருடன் மேலும்; கோபமுற்ற மாணவன் வெளியில் சென்று பாடசாலைக்கு வருகைதராது நின்ற தனது நண்பரான சக மாணவனை அழைத்துவந்து குறித்த ஆசிரியரை கைகளால் தாக்க முற்பட்டு ஆசிரியரும் மாணவரும் கைகலப்;புடன் கீழே விழுந்து புரண்டதாகவும் அவர்களை ஏனைய ஆசிரியர்கள் விடுவித்து இருவரையும் மேல் அறைக்குச் சென்று அமர வைத்து பொலிசாருக்குத் தகவல் கூறியதற்கமைய பாடசாலைக்குள் பொலிசாரர் வருகை தந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட மாணவர்கள் பொலில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியரிடம் தாழ்மையுடன் வேண்டியதற்கமைய ஆசிரியரின் விருப்புடன் மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேற்படி நிகழ்வின் ஊடாக பல விடயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கின்றது. மேற்படி சம்பவம் நடைபெற்ற பாடசாலை இலங்கையில் புகழ்மிக்க ஒரு தேசிய பாடசாலை கல்முனை பிரதேச பிள்ளைகள் மாத்திரமன்றி இலங்கையிலுள்ள பல பிரதேசத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் இங்கு கல்வி கற்கின்றார்கள். இப்பாடசாலையின் ஒழுக்க நிலை இன்று இவ்வாறு உள்ளது என்பதை நாங்கள் கவலையோடு நோக்க வேண்டியிருக்கின்றது. இத்தகைய மாணவர்களின் பிழையான முன்மாதிரிகள் ஏன் ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் ஒரு தூண்டதாலக அமையும் என்பது பற்றியும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கின்றது.

ஒருசில மாணவர்களின் இச்செயல் பாடசாலையின் மாணவர் சமூகத்தைப் பாதிக்கும்வகையில் ஒரு முத்திரையைக் குத்தியிருக்கின்றது. இன்று இந்த ஆசிரியருக்கு நடந்த சம்பவம் நாளை இன்னும் ஒரு ஆசிரியருக்கு நடக்காது என்பது என்ன நிச்சயம். அத்துடன் இப்பாடசாலையிலிருந்து வெளியாகும் மாணவர்கள் நமது சமூகத்திற்கு எத்தகையை நடைமுறைகளை கொண்டுவருவார்கள் என்று அச்சப்படவும் வேண்டியிருக்கிறது. 

இதற்கு மாணவர்கள் மட்டும் பொறுப்பு அல்ல அங்குள்ள ஆசிரியர் சமூகமும் பொறுப்புக் கூற வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பாடசாலையில் மேற்பார்வைக்காகச் சென்ற கல்முனை கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் மேற்பார்வையை முடித்துவிட்டு அதிபர் அறையில் சென்று அதிபருடன் பேசிக்கொண்டிருக்கும் போது பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் அதிபர் அறைக்குள் சென்று பிரதிக் கல்விப் பணிப்பாளரை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து அவருடன் ஒரு கைகலப்பு நடந்த சம்பவம் அந்த பாடசாலைச் சமூகத்தால் பெரிதுபடுத்தப்பட்டது.

அந்த சம்பவத்தில் ஒருசில ஆசிரியர்கள் திட்டமிட்டே பிள்ளைகளை பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராகத் தூண்டிவிட்டு, வன்முறையை அந்த மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து, பிரதிக் கல்விப் பணிப்பாளர் சென்ற மோட்டார் வாகனத்தையும் மாணவர்களைக் கொண்டு அடித்து உடைத்து  பிழையான வழிநடத்தல்களைச் செய்தார்கள். அத்தோடு மாத்திரம் நின்றுவிடாமல் மாணவர்களை வீதிக்கு இறக்கி ஆர்ப்பாட்டக் கலாசாரத்தையும் அவர்களுக்கு பயிற்றுவித்தார்கள்.  

இவ்வாறு அன்றைய சம்பவத்தில் மாணவர்கள் கிளர்ந்தெழும் அளவிற்கு குறிப்பிட்ட அப்பிரச்சினை வகுப்பறையிலோ பாடசாலை மைதானத்திலோ நடக்கவில்லை அதிபரின் அறைக்குள்தான் நடந்தது. எனவே இதை நேரில் காணாத மாணவர்களுக்கு அப்படி ஆவேஷம் எங்கிருந்து வந்தது. இந்தப் பிரச்சினைக்கும் மாணவர்களுக்கும் என்ன தொடர்பு.

பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக குறிப்பிட்ட ஒருசில ஆசிரியர்கள் மாணவர்களை பிழையாகத் தூண்டிவிட்டு வழிநடத்தினாலும் அங்குள்ள 150 ஆசிரியர்களுள்; 10 பேர் இதனைச் செய்வதை ஏனைய 140 பேரும் ஏனென்றும் கேளாது வாய்மூடி பொம்பைகளாக கைகட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டு நின்றமை அவர்களும் அதற்கு உடைந்தையாக இருந்தார்கள் என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. எனவே இதனை முழு ஆசிரியர் சமூகமும் பொறுப்பேற்க வேண்டும். 

பிரதிக் கல்விப் பணிப்பாளர் சரியானவரா, பிரதி அதிபர் சரியானவரா? என்பதை சட்டமும் கல்வித் திணைக்களமும் பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்ற நிலையில் அப்பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்களை இது தொடர்பாக வீதிக்கு இறக்காமல் தடுத்திருக்க வேண்டும். இதைச் செய்யாமல் இந்த ஆவேசத்தையும் எதிர்ப்பையும் அன்று மாணவர்களுக்குள் விதைத்தவர்கள் யார்? மாறாக மாணவர்கள்தான் தானாகக் கிளர்ந்து எழுந்தார்கள் என்றால் அதனைக் கட்டுப்படுத்த முடியாத ஆசிரியர்கள்தான் அங்கு இருக்கின்றார்களா? எனவே இன்று நடந்துள்ள பிரச்சினை அன்று மாணவர்களை தூண்டிவிட்டதன் பிரதிபலிப்பு என்பதனை அந்தப் பாடசாலைச் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அன்று விதைத்ததை இன்று அறுவடை செய்கின்றார்கள். அதற்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

உயர் அதிகாரிகளை மாணவர்களுக்கு முன்பாக வைத்து ஆசிரியர்கள் எதிர்த்துப் பேசினால் அந்த ஆசிரியரை நாளை மாணவன் எதிர்த்;துப் பேசுவான். உயர் அதிகாரியின் மோட்டார் வாகனத்தை மாணவனை வைத்து உடைத்தால் நாளை அதே மாணவன் ஆசிரியரின் மோட்டார்; வாகனத்தையும் உடைப்பான்;. இதைத்தான்; முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் எனபது.  

கல்வியின் நோக்கம் சமூகத்திற்கும் நாட்டுக்கும் ஏற்ற நற்பிரஜைகளை உருவாக்குவதுதான் அதனை ஒரு ஒழுக்கமுள்ள கல்வியாகவும் வழங்க வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும். சாஹிராக் கல்லூரியில் ஒருசில ஆசிரியர்கள் தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் தனிப்பட்ட விரோதங்களையும் தீர்த்துக் கொள்வதற்காக மாணவர்களைப் பயன்படுத்திய பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கு எதிரான சம்பவம் இன்று சுவரில் எரிந்த பந்துபோல்  ஆசிரியர்களின் பக்கமே திரும்பி இருக்கிறது. 

இதன் அறுவடையைத்தான் இன்று இந்தப்பாடசாலை கண்டிருக்கின்றது. இது முதலாவது அடி இன்னும் எத்தனை அடிகளை இம்மாணவர்கள் கற்றுக்கொடுத்த ஆசிரயர்களுக்கு பதிலடிகளாகக் கொடுக்கப் போகின்றார்களோ? ஆசிரியர்கள் எவ்வழியோ மாணவர்களும் அவ்வழி என்பதை அம்மாணவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். வினை விதைத்தால் வினைதான் அறுக்க முடியும் என்பதற்கு கல்முனை சாஹிரா கல்லுரி இன்று நல்ல பாடம் படித்துவிட்டது. பாடம் படிப்பிக்கின்றவர்களுக்கே மாணவர்கள் பாடம் படிப்பித்திருக்கிறார்கள். 

இது இவ்வாறு இருக்க பிரதிக் கல்விப் பணிப்பாளரின் பிரச்சினையின் போது துள்ளிக் குதித்த உள்ளுர் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் இப்போது எங்கே? பாடசாலைக்காக பல தியாகங்களையும் செய்யும் பழைய மாணவர் சங்கம் எங்கே? பாடசலை நலனில் அக்கறை கொண்டு திடீரென முளைத்த மாகா சங்கம் எங்கே?

சொந்த மண் பிறந்த இரண்டு நபர்களுக்கிடையிலான ஒரு பிரச்சினையை சுமுகமாகப் பேசி தீர்;வுகாண முடியாதவர்களாக தின்பாருக்கு தேன் எடுத்துக் கொடுத்தவர்கள் செய்த மாபெரும் கைங்கரியம் வெளியூர் அதிபர் ஒருவர் பாடசாலைக்கு அதிபரானதுதான். இதில் தோற்றுப்போனது பாடசாலையும் இந்த சமூகமும்தான் என்பதை இப்போதாவது இந்த சமூகம் உணருமா? இதுபோன்று இன்னும் பல படிப்பினைகளை இந்தப் பாடசாலை எமக்கு காட்டித்தரும் ஆனாலும் நாங்கள் குருடர்களாகவும் பக்கச்சார்புடையவர்களாகவும் இருந்தால் விடிவு பிறக்காது மக்களே.  

2 comments:

  1. மனவர்ருக்கும் ஆசியருக்கும் இடையில் விருப்பு வெறுப்பு ஏற்படுவது ஒரு இயல்பான தன்மையே.. இது ஒரு குறித்த பாடசாலைக்கோ அல்லது ஊருக்கோ நாட்டுக்கோ உரியதான விடயம் அல்ல .... ஆனால் இருபகுதியினரும் எல்லை மீறி தமது எதிர்புணர்வை வெளிப்படுத்துவது தான் இங்கு வாதப் பிரதி வாதங்களை ஏற்படுத்துகிறது... இது நிட்சயமாக மனோ நிலை சம்பந்தமான பிரச்சினை... இதை, இது சம்பந்தமான வைத்தியரிடமோ அல்லது பாண்டித்தியம் பெற்றவரிடமோ இப்படியான மாணவர்களையும் ஆசிரியர்களையும் கையாளப்பட வேண்டும்... அதிலும் முக்கியமாக இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட அந்த கல்வி அதிகாரிக்கு மனோ நிலை வைத்தியமும் + ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும் இது அவருக்கு சிறு வயது முதல் இப்ப வரைக்கும் உள்ளது...

    மாட்டை பற்றி கட்டுரை எழுது என்ற வினாவுக்கு மாடு தென்னை மரத்தில் கட்டப்பட்டது என்று கூரி பின்னர் முழுக்க முழுக்க தென்னை மரம் பற்றியே அந்த கட்டுரை எழுதப்பட்டதை போல் உள்ளது இந்த கட்டுரை... தயவு செய்து ஒரு பொது நல இஸ்தாபனத்தில் உங்கள் அரசியலையோ சுயனலத்தையோ சண்டைகலையோ வைத்துக் கொள்ளாதீர்கள்.

    ReplyDelete
  2. தாமதமாக வந்தால் குப்பை கூட்டவிடாமல் பெற்றோர்றிடம் பாடசாலை நிர்வாகம் அறிவிக்கலாம். அல்லது பெற்றோரை அழைத்து வர சொல்லலாம். அதை விட்டு இந்த 22டாம் நுற்றாண்டில் குப்பை கூட்டல், மண் வெட்டுதல் இப்படியான வேலைகளை செய்யப்பணிப்பது பாடசாலைகளின் நிர்வாக அமைப்பு திருத்தப்படவில்லை என்பதை காட்டுகிறது .

    ReplyDelete

Powered by Blogger.