சவூதி அரேபியாவில் மோசமாக வாகனமோட்டியவருக்கு 10 ஆண்டு சிறை, 1000 கசையடி தண்டனை
மோசமாக வானம் ஓட்டிய இளைஞர் ஒருவருக்கு சவு+தி அரே பிய நீதிமன்றம் ஒன்று 10 ஆண்டு சிறைத்தண்டனை யும் 1,000 கசை யடிகளையும் விதித்திருப்பதோடு வாகனம் ஓட்ட வாழ்நாள் தடையும் விதித்துள்ளது.
இந்த இளைஞன் தனது வாகனத்தை மேலெழச்செய்து சாகசம் காட்டும் பல வீடியோக்களை யு+டியு+ப் இணையதளத்தில் பதிவேற்றி இருக்கிறார்.
ஒரு சில வீடியோக்களில் வாகன போக்குவரத்திற்கு மத்தியிலும் 23 வயதான இளைஞன் இந்த சாகசத்தை செய்கிறார். மற்றொரு வீடியோவில் குறித்த இளைஞன் தனது நண்பருடன் சேர்ந்துகொண்டு இயந்திர துப்பாக்கிகளால் வானத்தை நோக்கி சுட்டவாறு வாகனத்தில் செல்கிறார்.
இந்த இளைஞனின் மோசமான நடத்தை குறித்து ரியாத் நகர மக்கள் பலரும் முறையிட்டுள்ளனர். இந்த இளைஞனுக்கு மரண தண்டனை விதிக்குமாறு தலைமை வழக்குத்தொடுனரின் கோரிக்கை மூன்றுபேர் கொண்ட நீதிபதிகள் குழுவால் நிராகரிக்கப்பட்டது.

Post a Comment