'அல்லாஹ்வுக்காக ஒன்றை தவிர்த்தால் அல்லாஹ் அதை விட சிறந்தததை வழங்குவான்' (படம் இணைப்பு)
(ரியாத்தில் இருந்து மொஹமட் ரிப்ளான்)
சில தினங்களுக்கு முன் சவ்தி அரேபியாவின் அம்லஜ் என்ற மாகாணத்தில் வெறும் 800 ரியாழ் சம்சளத்துக்காக ஆடு மெய்துக் கொண்டிருந்த சூதானைச் சேர்ந்த அத்தய்யிப் யூசுப் என்பவர் அமானிதத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்ந்தததை அவதானிக்க நேர்ந்தது. இச்சம்பவம் உமர் ரழி அவர்களின் காலத்தில் நடந்த உமர் பாக்காவிட்டாலும் உமரைப் படைத்த இறைவன் பார்க்கின்றான் என்ற ஒரு சாதாரண ஏழை குமரின் வார்த்தை அவளை கலீபாவின் மருமகளாக மாற்றிய சம்பவத்தை நினைவு கூற வைத்தது. இந்தப் பெண்ணின் வாரிசுகளில் ஒருவர்த்தான் இரண்டாவது உமர் என பெயர் பெற்ற உமர் பின் அப்துல் அஸீஸ் ரஹ்..!
இந்த சகோதரரின் நோர்மையை பாராற்றி ரியாதில் உள்ள சூடான் தூதரக ஏற்பாட்டில் இரண்டு இலட்சம் மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 20000 மொத்தமாக 220000 ரியாழ்கள் சன்மானமாக வழங்கி கொரவிக்கப்பட்டார் இத்தொகையினால் தானும் மற்றும் தனது தாய் தந்தை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி தனக்காக ஒரு வீட்டையும் கட்ட இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
http://www.jaffnamuslim.com/2014/02/blog-post_7144.html
http://www.jaffnamuslim.com/2014/02/blog-post_7144.html

Post a Comment