Header Ads



மாணவனின் தாக்குதலில் அதிபர் படுகாயம்

(Adt) அதிபர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வெலிகந்த - செவனபிட்டிய பகுதி பாடசாலை ஒன்றின் 11ம் தர மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். 

வகுப்பறையில் இன்று (20) காலை மேசை மீது ஏறி ஒழுக்கமின்றி நடந்து கொண்ட மாணவனை அதிபர் கண்டித்துள்ளார். 

அதன்போது ஆத்திரமடைந்த மாணவன் பலகை துண்டொன்றை எடுத்து அதிபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்த அதிபர் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதிபரின் கழுத்து மற்றும் முதுகு பகுதியில் அதிக காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார். 

No comments

Powered by Blogger.