மன்னாரில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில காலமாக மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துக் காணப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் கஷ்ட நிலையை எதிர் நோக்கியிருந்தனர் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக் காரணமாக மரக்கறி விலைகளையாவது குறைந் விலையில் பெற்றுக்கொள்ளும் வகையில் மன்னார் நார மக்களால் மன்னார் 54வது படைப்பிரிவின் தலைவருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அண்மையில் திறந்து வைக்கப்படமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மன்னார் மக்களின் நலன் கருதி இராணுவத்தினரால் திறந்து வைக்கப்பட்ட மரக்கறி விற்பனை நிலையத்தின் மூலம் மக்கள் பெரிதும் நன்மையடைந்து வருவதாகவும் பயளனாளிகளால் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் தனியார் வியாபார நிலையங்களில் தாம் அதிக விலை கொடுத்தே இதுவரை காலமும் மரக்கறி வகைகளை பெற்று வந்ததாகவும் தற்போது குறைந்த விலையில் மரக்கறி வகைகளை பெறுவதால் ஒரு சில வியாபாரிகள் மேற்படி இராணுவத்தின் மக்கள் சேவையை குறை கூறுவதாகவும் மேற்படிச் சேவையை தமக்கு தொடர்ந்தும் வழங்குமாறும் மன்னார் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி மரக்கறி விற்பனை நிலையத்தினை மன்னார் மாவட்ட 54வது இராணுவ படைப்பிரிவின் நலன்புரிச் சங்கம் மெனிக்பாம் விற்பனை நிலையத்தில் இருந்து புதிய மரக்கறி வகைகளை மக்களுக்கு வழங்கி வருவதுடன் அவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்துவருதால் அதிகமான மக்கள் நன்மையடைகின்றனமை குறிப்பிடத்தக்கது.
54வது படைப்பிரிவின் ஏரியா கொமாண்டர் கேணல் பெரேரா, கேணல் ஜயவர்த்தன, கேணல் ரத்நாயக்க , மூர்வீதி ஜூம்ஆப் பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர் எஸ்.எம்.தம்சில், முஹமட் இம்ரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மேற்படி மரக்கறி வர்த்தக நிலையத்தை திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment