Header Ads



உஸ்மானிய பேரரசின் போரில் ஈடுபட்டவர் பலஸ்தீனில் உயிர் வாழ்கிறார்

உலகின் மிக வயதானவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க பலஸ்தீன நாட்டவரான ராஜா அல் தூம் என்பவர் எதிர்பார்த்துள்ளார். கடந்த 1889ஆம் ஆண்டு பிறந்ததாக கூறும் இவர் தனது வயது 125 என்றும் தாம் உஸ்மானிய பேரரசின் கீழ் முதலாம் உலகப் போரில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தாம் இன்றும் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தனது நீண்ட ஆயுளுக்கு உணவுப் பழக்கமே காரணம் என்றும் அல் தூம் விபரித்துள்ளார். குறிப்பாக தாம் சிகப்பு நிற உணவுகளை தவிர்த்து வருவதாகக் குறிப்பிட்டிருக்கும் அவர் ஆலிவ் எண்ணெய், பால் மற்றும் முயல் இறைச்சி ஆகியவற்றையே பெரும்பாலாக உணவாக கொள்வதாக கூறியுள்ளார்.

இந்த முதியவர் ஐந்து வெவ்வேறு காலங்களில் வாழ்ந்திருப்பதாக காசா பகுதியில் அவரது அயலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் குறித்த பகுதியில் பல நூற்றாண்டுகள் ஆட்சியில் இருந்த உஸ்மானிய பேரரசு, பிரிட்டன் காலனி ஆட்சி, எகிப்து ஆட்சி, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு, தற்போது காஸாவின் ஹமாஸ் ஆட்சி என ஐந்து காலப் பிரிவுகளிலும் அவர் வாழ்ந்துள்ளார்.

துருக்கியின் அனடொலு செய்திச் சேவைக்கு அல் தூம் கூறும் போது, உஸ்மானிய பேரரசில் தனது 30 ஆவது வயதில் கட்டாய இராணுவ சேவையில் இணைந்து முதலாவது உலகப் போரில் சண்டையிட்டதாகக் குறிப்பிடுகிறார்.

தனது முதல் திருமணத்தில் குழந்தை இல்லாததால் இரண்டாவது திருமணம் முடித்திருக்கும் அல்தூம், நான்கு ஆண்கள் மற்றும் 5 பெண்களின் தந்தையாவார். தற்போது அல்தூமின் குடும்பம் 370 உறுப்பினர்களாக பெருகியுள்ளது.

No comments

Powered by Blogger.