இஸ்லாமிய இலக்கிய உலக மாநாடும், இலங்கைவாழ் இலக்கியவாதிகளின் ஆதங்கமும்..!
(எஸ்.எல். மன்சூர்)
இஸ்லாமிய அடிப்படையிலான இலக்கியங்களை உலகிற்குப் பறைசாற்றும் ஒரு கைங்கரியமாகவே கடந்தகாலங்களில் இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடாத்திவருகின்ற மாநாட்டுக்கு இஸ்லாமிய இலக்கிய மாநாடு என அழைக்கப்படுகின்றது. இஸ்லாம் சார்ந்த இலக்கிய நிகழ்வுகளை பலநாட்டு அறிஞர்களும் கலந்து கொள்ளத்தக்க வகையில் அது அமைந்துவிட்டால் அதனை உலக மாநாடு என்கிறோம். இந்த அடிப்படையில் இம்மாதம் 14, 15, 16ஆம் (இன்றுடன் முடிவடையவுள்ளது) திகதிகளில் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கிய மாநாடு ஒரு மூடுமந்திரமாக நடைபெறுவதற்கான காரணம் யாது?
பொதுவாக உலக அளவில் நடைபெறும் ஒரு சமூகத்தின் இலக்கிய பெருவிழாவானது குறித்த ஒருசிலரைக் கொண்டு நடாத்த வேண்டியதன் அவசியம் என்ன? என்பதுபற்றி இதனை ஒழுங்கு செய்தவர்களிடம் கேட்கத்தான் வேண்டும்.
ஏனெனில், இலங்கையில் இஸ்லாமிய இலக்கியவாதிகள் என்போர் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர்தான் வாழ்கிறார்களா? என்பது அடுத்த கேள்வியாகும். இஸ்லாமிய இலக்கியம் என்பதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களை கூறுகின்றனர். கோட்பாட்டு ரீதியான விளக்கம் ஒருபுறமிருக்க தமிழ் பேசும் முஸ்லீம்கள் மாத்திரம் படைக்கின்ற முஸ்லிம்பேரிலான இலக்கியம் இஸ்லாமிய இலக்கியமா? இஸ்லாமிய அடிப்படையிலான மூலாதாரங்களைக் கொண்ட அம்சங்களை உள்ளடக்கும் வகையில் யார்படைத்தாலும் அது இஸ்லாமிய இலக்கியமா? பொதுவாக முஸ்லிம்களால் படைக்கப்படுகின்றவை அனைத்தும் இஸ்லாமிய இலக்கியங்களா? போன்ற பலகேள்விகள் அண்மைக்காலத்தில் எழுப்பப்பட்டு வருகின்றன
கும்பகோணத்தை இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வெற்றிலை கோப்பி போன்றவற்றுக்கும் பெயர்பெற்றது. இவ்வாறு புகழ்பெற்ற ஒரு இடத்தில் நடைபெறுகின்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு சம்பந்தமாக தமிழ்பேசும் மக்கள் வாழும் நாடுகளிலுள்ள இலக்கியவாதிகள் அங்கு சென்று பார்வையிடவோ, பங்குபற்றவோ மறைத்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ளவதில் இலக்கிய நெஞ்சமுடையோரை சற்று நெருடத்தான் செய்தன.
இந்த மாநாடு பற்றி கடந்தவாரம் இந்திய வெப்தளமொன்றில் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. அதாவது 'அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 8வது மாநாடு பிப்ரவரி 14, 15, 16 ஆகிய மூன்று தினங்கள் குடந்தையிலுள்ள டி.எஸ்.மஹாலில் நடைபெறுகிறது.
எதிர்வரும் 14ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு துவங்கும் மாநாட்டிற்கு இஸ்லாமிய இலக்கிய கழகத் தலைவர் அப்துல் ரகுமான் தலைமை தாங்குகிறார். நீதியரசர் கே.என்.பாட்ஷா, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.திருமலை, பாரதி கிருஷ்ணகுமார், சிங்கப்பூர் ஜே.எம்.சாலி, இலங்கை எஸ்.எச்.எம்.ஜமீல், சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜே.டி.குரூஸ், எழுத்தாளர் அ.மார்க்ஸ், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், நகர்மன்றத் தலைவர் ரத்னாசேகர் உட்பட பலரும் கலந்து கொள்கிறார்கள். இரண்டாம் நாள் ஆய்வுக்கோவை வெளியீடு மற்றும் இசை ஆய்வரங்கம் நடைபெறுகிறது.
3ம் நாள் நிகழ்வில் 'மண்பாடும் நாயகத்தின் பண்பாடு' என்ற தலைப்பில் கவி அரங்கம் நடைபெறுகிறது. நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கல் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ரூபாய் 1 லட்சத்துடன் கூடிய உமறுப்புலவர் விருது பாடகர் நாகூர் ஹனிபா அவர்களுக்கு வழங்கப்படுகிறது' என்கிற செய்தி மாத்திரமே இது நடைபெறுவதற்கான விளம்பரமாகக் காணப்பட்டது. கடந்தாண்டின் இறுதியில் இந்த மாநாடு சம்பந்தமான அறிவித்தல் ஒன்றை கவிக்கோ அப்துல்றகுமான் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
அதில் அவர் 'கும்பகோணத்தில் எதிர்வரும் 2014 பெப்ரவரி மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் இஸ்லாமிய இலக்கிய கழக பன்னாட்டு மாநாடு நடைபெறும். 1974ம் ஆண்டு திருச்சியில் இலக்கிய கழகம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து 7 பன்னாட்டு மாநாடுகளும், 3 மாநில மாநாடுகளும் நடத்தியுள்ளோம். பொதுவாக முஸ்லிம்களின் பங்கு தமிழ் இலக்கியத்தில் குறைவு என்ற கருத்து நிலவுகிறது. இது தவறு என்பதை வெளிப்படுத்தவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் முஸ்லிம்களின் உலக இசை வரலாறு, இலக்கியத்தின் பங்கு போன்றவற்றையும், 1000 புலவர்கள் தமிழ் இலக்கியத்தில் 29 காவியங்களை படைத்துள்ளனர் என்பதையும் வெளிப்படுத்த உள்ளோம்.
சங்க இலக்கியங்களில் எத்தனையோ முஸ்லிம்கள் புலவர்களாக இருந்துள்ளனர். முஸ்லிம் புலவர்கள் மற்ற சமுதாயங்களை தாக்கி எழுதியதே கிடையாது. தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ் புலவர்கள் பல நூல்களை படைத்துள்ளனர். பல நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால் வெளியிடப்படவில்லை. பல நூல்கள் அச்சிடப்படாமலும் உளளன. எங்களின் நோக்கமே இலக்கியங்கள் மூலமாக இதயங்கள் இணைய வேண்டும். வேறு ஏதாலும் இணைக்க முடியாது. கும்பகோணத்தில் மாநில மாநாடு நடத்துவதாக இருந்தோம். ஆனால் மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளிலிருந்து புலவர்கள், கவிஞர்கள் வர உள்ளதால் பன்னாட்டு மாநாடாக நடத்தப்படுகிறது. மேலும் முஸ்லிம்கள் எழுதிய பல நூல்கள் இங்கு காணொலியாக காட்சி படுத்தவுள்ளோம்' எனவும் கவிக்கோ அப்துல்றகுமான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்றால் 'சீறாப் புராணம், மஸ்தான் சாஹிப் பாடல்கள்' என்ற இரண்டைத்தான் தமிழ் உலகம் அறிந்திருந்தது. ஆனால் சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கிறிஸ்தவம் ஆகிய சமயங்களைவிடத் தமிழுக்கு மிகுதியாக இலக்கியக் கொடையளித்த சமயம் இஸ்லாம். இந்த அரிய உண்மையைத் தமிழ் உலகு அறியச் செய்த பெருமை இஸ்லாமிய இலக்கியக் கழகத்திற்கு உண்டு. ஏழு பன்னாட்டு மாநாடுகளையும் மூன்று மாநில மாநாடுகளையும் நடத்தி இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உலகறியச் செய்த பெருமையும் இஸ்லாமிய இலக்கியக் கழகத்திற்கு மாத்திரமே உண்டு. அத்தகைய கழகம் உலக நாடுகளிலுள்ள இஸ்லாமிய இலக்கிய நெஞ்சங்களுக்கு அழைப்பு விடுப்பதிலிருந்து பின்னடைந்தமைக்கான காரணம் தெரியவில்லை என்கின்றனர் இலக்கிய ஆர்வலர்கள்.
கடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின்போது வருகை தந்திருந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தெரிவித்திருந்த கருத்துக்கள் இவை 'அன்றைய முஸ்லிம் புலவர்கள் தாய்த்தமிழை அதிகமதிகம் நேசித்தனர். ஓரிறைக் கொள்கைச் சித்தாந்தத்தை உயிருக்கும் மேலாய்க்கருதிய அத் தமிழ் சான்றோர் அந்த இஸ்லாமிய பெருநெறியை அமுதத்தமிழில் வார்த்து வழங்க முனைந்தனர். அதுவே இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்று வடிவம் பெற்றது. தமிழ் இலக்கிய உலகிற்கு இஸ்லாமிய புலவர்கள் ஆற்றியுள்ள அரும்பணி போற்றி பாராட்டுதற்குறியதாகும்' என்று வாழ்த்தியிருந்தார்.
மேலும், 'இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி எனும் எழுச்சிமிகு கருத்துச் செறிவுச் சுலோகத்தை வீரியமாய் வெளிப்படுத்தி வழியையும் மொழியையும் இரு விழிகளாக, இதயமாக எண்ணி இன்றும் செயல்படுகின்றனர் முஸ்லீம் தமிழ் அறிஞர்கள். இஸ்லாமிய புலவர்கள் அறிஞர் பெருமக்கள் அன்றும் இன்றும் என்றும் உள்ள தேன் தமிழுக்கு ஆற்றிவரும் நற்றொண்டுகள் ஆகும். நெறிகள் பலவாயினும் குறி ஓன்றே. இவ்வுண்மையை நடைபெற்ற கருத்தரங்குகளும் நடக்கவிருக்கும் கருத்தரங்குகளும் காட்டும் என்றே நம்புகிறேன்' என்று கூறியிருந்தார் டாக்டர் ந.சஞ்சீவி.
இவ்வாறு பல்வேறு சமயத்தவர்கள் புகழ்ந்து துதிக்கும் இன்பத்தமிழின் சுவையை இலங்கைவாழ் இலக்கிய நெஞ்சங்களுக்கும் அறிவித்து அவர்களையும் பங்குபற்றச் செய்து, அவர்களுக்கும் பரிசுகள் பாராட்டுக்கள் வழங்கி உலகமெலாம் ஒலிக்கச் செய்யும் பெருவிழாவாக எட்டாவது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற்றிருக்க வேண்டும். இருந்தாலும் இலங்கையிலிருந்து இந்த மாநாட்டுக்குச் சென்ற அத்தனை முத்துக்களும் பெறுமதிமிக்கவர்கள். அவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள், மதிக்கப்படவேண்டியவர்கள். அவர்களுக்கு எம்வாழ்த்துக்கள் என்றுமே உண்டு.
எனவே, இனிவரும் காலங்களில் வெளிநாடுகளில் நடைபெறுகின்ற மாநாடுகளுக்குச் செல்கின்றவர்களைத் தெரிவு செய்வதில் வெளிப்படையான தன்மை காணப்படுகின்றபோதுதான் இதயங்கள் ஒன்றுபடும். இருட்டடிப்போ, மூடுமந்திரமோ தேவையில்லை. நாடுமுழுவதும் பரந்து வாழ்கின்ற இலக்கிய ஆர்வலர்களின் ஆதங்கங்களை இனிவரும் காலங்களிலாவது இஸ்லாமிய இலக்கியக் கழகமும், அவை சார்ந்த உறுப்பினர்களும் தொய்வின்றி மேற்கொள்வார்கள் என்கிற நம்பிக்கையுடன் எல்லோரும் ஒன்றிணைந்து இஸ்லாமிய இன்பத்தமிழ் இலக்கியத்தை உலகமெலாம் மேலோங்கச் செய்ய உறுதிபூணுவோம்!

ஈலாயா (Eelaayaa)
ReplyDeletehttp://ulikininpin16.tumblr.com/
ஈலாயா மானில னூரகப் பாடல் என்பது, “ஈலாயா தேசத்தின் வரலாட்ரய்” சொல்ல முயலும், மிகச் சிரியதொரு முயர்ச்சி ஆகலாம். தனி ஒரு எலுத்திலான சொல்லய்ப் போலும், தனி ஒரு வரியிலான பாடல் ஆக, மொத்தம் னூரு பாடலய்க் கொன்டு “ஈலாயா மானில னூரகப் பாடல்” ஆக்கப்பட்டு உல்லது.
—————————————————-
பாடல்: 080
“புத்தலம் என்னும் புதுமய் உலகமே”
பொருல்:
“அலவில்லா அன்பே போட்ரி, போட்ரி,
னிகரில்லா பன்பே போட்ரி, போட்ரி.”
“தம்புல்ல என்ப, தம்முடய்ய பில்லய்யே.”
“வாப்பா என்ப, வாருங்கோ அப்பாவே.”
“உம்மா என்ப, உயிர் கொடுத்த அம்மாவே.”
“புத்தலத்தின் பொன்பரப்பி (பொம்பரிப்பு) என்பது, பொன் தானியம் வெலய்யும் சமவெலிப் பூமி (plain land of the golden grain) ஆகும்.”
“புத்தலத்தின் குதிரய்மலய் (Hippuros / Horse Mountain) என்பது, வனிகம் செலித்து ஓங்கிய பன்டய்ய துரய்முகம் ஆகும்.”
“புத்தலத்தின் கல்பிட்டிக்குடாவில் உல்ல கல்பிட்டி என்பது, புத்தலத்தின் கடல் வாசலும், பன்டய்ய துரய்முகப் பட்டினமும் ஆகும்.”
“புத்தலத்தின் தம்பவன்னி (தம்பபன்னய் / Tambapanne / Taprobane) என்பது, கி.மு.483இல் வட இந்திய இலவரசர் குமாரசிங்க விசய்யரும், அவரது னன்பர் கூட்டத்தார் 700 பேரும், மரக்கலக் கப்பலில் கரய் சேர்ந்திட்ட, பன்டய்ய துரய்முகப் பட்டினம் ஆகும். அதுவே இயக்கரின் வசிப்பிடமும் ஆகும் என்ரு, மகாவம்சம் என்னும் சுவடியில் சொல்லப்பட்டு உல்லது. இயக்கர் இல்லாமல், ஈலாயாவின் வரலாரே இல்லய் என்ரும் சொல்லப்படுது.”
“இபின்படூட (Ibn Batuta) என்னும் பயனி தனது குரிப்பேட்டில், ஈலாயாவின் மேர்க்குக் கடல்கரய்யில், சிலாபத்தில் இருந்து னீர்கொலும்பு வரய்யில், யால்ப்பானப் பேரரசரின் னூட்ருக்கனக்கான கப்பல் இருந்ததய்ப் பார்த்திட்டதாகக் குரிப்பிட்டு உல்லார்.”
“டிகுவரோசு (De Queyroz) என்னும் போர்த்துக்கீசிய வரலாட்ரு ஆசிரியர், ஈலாயாவின் சிலாபம், புத்தலம், னீர்கொலும்பு ஆகிய மேர்க்குக் கடல்கரய்ப் பகுதி, தமிலரின் வசிப்பிடம் என்ரு குரிப்பிட்டு உல்லார்.”
“கி.பி.16ஆம் னூட்ரான்டில் ஈலாயாவின் மேல்மாகானம், மட்ரும் வடமேல் மாகானம் இரன்டிலும், தமிலு கல்விக்கூடம் னிரம்பி இருந்திட்டு என்ரு, போர்த்துக்கீசிய ஆவனத்தில் குரிப்பிடப்பட்டு உல்லது.”
புத்தலம் முதலான மேர்க்குக் கரய்யில் வசித்திட்ட பெரும்பாலன தமிலர், இன்ரு சிங்கலராக மாரிவிட்டனர் என்ரு சொல்லப்படுது.
தொடுப்பு:
(1) இப்னு பதூதா (Ibn Battuta, 25th Feb 1304) என்னும் “அபு அப்துல்லா முகமது இபின் பதூதா” என்பார், மொரோக்கோ தேசத்தய்ச் சேர்ந்த கல்வியாலரும், உலகம் சுட்ரும் பயனியும் ஆவார்.
“பெருக்க மரம் எனப் பெருகிய
புத்தலத்தின் பெரு மக்கலய்க் கன்டுமே
இப்னு பதூதா வீதிவலம் வந்தே.”
(தனிப்பாடல்: முல்லய் முசுரிபா)
(2) ரோம் வரலாட்ரு ஆசிரியர் ஆன பிலினி என்பார், குதிரய் மலய்யய் “கிப்பரசு” (Hippuros) என்ரு குரிப்பிட்டு உல்லார். இப் பெயர் ஆங்கிலத்தில் “ஆர்சு மவுன்டய்ன்” (Horse Mountain) என்ரு குரிப்பிடப்படுது.
—–