Header Ads



அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரி மாணவர்கள் திறமை


(எஸ்.அன்சப் இலாஹி)

மாகாணமட்ட  கணித ஒலிம்பியாட் 2014 தெரிவுப் போட்டியில் கல்முனை கல்வி மாவட்டத்தில் மிகக் கூடுதலான மாணவ, மாணவிகள் அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை, கல்முனை கல்வி மாவட்டங்களில் அண்மையில் இத் தெரிவுப் பரீட்சை நடைபெற்றது. இதன் போதே அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கூடுதலாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை, அம்பாரை, மட்டக்களப்பு கல்வி மாவட்டங்களில் அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் இருந்தே 06 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று கனிஷ்ட கல்லூரி தரம் 06இல் குழு ஒன்றில் ஏ.வி. சர்ஹான், எம்.ஆர்.ஹாத்தீம், ஏ. டபிள்யூ. சிமாக் முகம்மட், எம்.எம். செய்னப் சுஹா ஆகியோரும், தரம் 07 மற்றும் தரம் 08 குழு இரண்டில் ஏ.ஏ. ஹமானா, ஏ.எஸ். அம்றிஸ் சுஹா ஆகியோரே தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியின் மாணவ, மாணவிகள் அதிபர் ஏ.ஜி. அன்வர் மற்றும் ஆசிரிய, ஆசியைகளின் சிறந்த வழிகாட்டலில் மிகக் குறிகிய காலத்தில் பல அபாரத் திறமைகளை ஈட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர்களுக்கான தேசியமட்ட போட்டி மார்ச் மாதம் 22ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

1 comment:

Powered by Blogger.