Header Ads



கல்முனை பிரதேச செயலாளராக ஐ.எம்.ஹனிபா


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை பிரதேச செயலாளராக  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா  பதில் கடமை புரிவதற்கு இன்று திங்கட் கிழமை கடமைகளை பொறுப்பு ஏற்றுள்ளார் .   கல்முனை பிரதேச செயலாளராக கடமை புரிந்த எம்.எம்.நௌபல்அம்பாறை மாவட்ட   செயலகத்துக்கு  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவரது  இடமாற்றத்தை அடுத்தே ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா  பதில் கடமை புரிவதற்குநியமிக்கப் பட்டுள்ளார் 

இதேவேளை  கல்முனை பிர  தேச செயலகத்துக்கான பிரதேச செயலாளராக  நிரந்தரமான ஒருவரை நியமிப்பதற்கான முஸ்தீபு இடம் பெறுகின்றது. கல்முனை மாநகர சபை ஆணையாளராக கடமை புரியும் ஜே.லியாகத் அலியை கல்முனை பிரதேச செயலாளராகவும் ,சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம். லத்தீபை  கல்முனை மாநகர ஆணையாளராகவும் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.




No comments

Powered by Blogger.