தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலம் ஆய்வுச் சஞ்சிகை வெளியீடு
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தினால் வெளியிடப்படும் 'கலம்' ஆய்வுச் சஞ்சிகையின் ஆறாவது தொகுதி செவ்வாய் (25.02.2014) அன்று பீடாதிபதி எம்.ஏ. ஜப்பார் தலைமையில் இடம்பெற்றது.
சஞ்சிகையின் பிரதம ஆசிரியரான கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரப் அவர்களினால் சஞ்சிகையின் முதற் பிரதி பீடாதிபதிக்குக் கையளிக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் துறைத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பீட மன்றத்தின் (வெளிவாரி உறுப்பினரான கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். ஜெலீல் அவர்களும் மற்றும் மாணவப் பேரவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இச்சஞ்சிகை சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மொழித்துறை சார், உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.








Post a Comment