ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடமாட்டேன் - அஸாத் சாலி
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஐ. தே. க.வினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மேடை பிரசாரங்களிலும் கலந்து கொள்வதில்லையென மத்திய மாகாண ஐ. தே. க. உறுப்பினர் அஸாத் சாலி தெரிவித்தார். இந்த மாகாண சபைத் தேர்தலின் மூலம் ஐ.தே.கவுக்கு மக்கள் நல்லதொரு பாடமொன்றை புகட்டுவ ரெனவும் அவர் கூறினார். மத்திய மாகாண சபையின் கூட்டம் முடிவடைந்ததின் பின்னர் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது :-
ஐ. தே. க.வினது திட்டமிடப்படாத சீரற்ற கட்டமைப்புகளின் காரணமாக தொடர்ச்சியான பலவீனங்கள் இடம்பெற்று வருவது யாரும் அறிந்த உண்மை. அதுபோன்றுதான் கொழும்பு, கம்பஹா, களுத்துறை போன்ற மாவட்டங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்தது மட்டுமல்லாது கடந்த தேர்தல் காலங்களில் தொடர்ச்சியாக தோல்விகளை அனுபவித்து வருபவர்களுக்கு அக்கட்சி மீண்டும் மீண்டும் சந்தர்ப்பம் அளித்து வருகின்றது. ஆகவே ஐ. தே. க. விலிருந்து யாரும் ஜனாதிபதியாக வரவேண்டுமென்றோ அல்லது ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென்ற எந்த பொறுப்புணர்ச்சி யுமில்லை என்பது கட்சியின் செயற்பாட்டில் தெளிவு பெற வேண்டியுள்ளது.
தலைவருக்கும் தலைமைத்துவ சபைக்கும் தேவையானவர்களை உள்வாங்குவதால் கட்சியின் முன்னேற்றத்தை காண முடியாது மாநகர தேர்தலில் வெற்றி பெறும் அபேட்சகர்களை முன்நிறுத்த வேண்டும். இவ்வாறு தற்போது பல பிரச்சினைகளுக்கு ஐ. தே. க. உள்வாங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
தற்போது நடைபெறப் போகும் மாகாண சபை தேர்தலில் எமது தேசிய ஐக்கிய முன்னணி கட்சி மட்டுமல்லாது முஸ்லிம் சமூகத்தை ஐ. தே. க. உரிய மதிப்பளிக்காமல் நிராகரித்து வருகின்றது. ஆகவே நான் ஐ. தே. க. வில் இணைந்திருந்தாலும் கட்சி விடும் தவறுகளை சுட்டிக்காட்டுவதிலிருந்து நான் தயங்க மாட்டேன் எனவும் ஜனாப் அசாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.
.jpg)
Post a Comment