Header Ads



வரட்சி தொடரும் - குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும்

எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் நாட்டின் எந்த பகுதியிலும் மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது உள்ள வெப்ப நிலை இந்த மாத இறுதி வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகாவலி கங்கை, களனி கங்கை, கழுகங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகிய நீர் நிலைகளின் மட்டம் பாரிய அளவில் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால்அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதிக பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் பௌசர்கள் மூலம் குடிநீரை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நிலை காரணமாக மத்திய மாகாணத்தில் குறிப்பாக ஹற்றனையும் அதனை அண்டிய பிரதேசங்களிலும், மரக்கறி மற்றும் தேயிலை செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.