அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் நடவடிக்கை எடுப்பார்களா..?
(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
முசலிப்பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புதுவெளிக்;கிராமம் ஒரு பாரம்பெரிய கிராமம் இப்பிரதேசத்தின் ஆரம்ப கால ஆசிரியர்களில் பெரும்பாலானோர் இப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே ,அது மட்டுமின்றி முசலிப்பிரதேசத்தின் கிராம சபைத் தலைவர்களாக இருந்தவர்கள அனைவரும் புதுவெளிக்கிராமத்தின் வாரிசுகளே எனில் மிகையில்லை.இப்படிக் கல்வியிலும்; ,அரசியலிலும் செல்வாக்குச் செலுத்திய இக்கிராமம் தனக்கென இருந்த ஒரு பாடசாலையை முசலிக் கிராமத்திற்கு விட்டுக்கொடுத்தது.இது தான் சரித்திரம். இதனால் புதுவெளிக்கிராமத்திற்கு ஒரு பாடசாலையின் தேவை மெல்ல வளர்ச்சியடைந்து வந்தது.
அல்-ஹிறா என்ற பெயருடன் இயங்கியிருந்த முசலிப்பாடசாலை மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்று தனது பெயரை முசலி ம.வி. என மாற்றிக் கொண்டதுடன் கொத்தனி மகாவித்தியாலயமாகவும் வளர்ச்சி பெற்றது.1990 இடப்பெயர்வின் பின்பு செயலிழந்த கிடந்த பாடசாலை மக்களின் மீள் குடியேற்றத்தின் பின்பு 1எபி தரம் கொண்ட தேசிய பாடசாலையாகவும் ,மகிந்தோதயப் பாடசாலையாகவும் வளர்ச்சி கண்டது. ஆயிரம் பாடசாலைத் திட்டத்தின் கீழ் 01,02,03 வகுப்புக்களை தனியாக பாடசாலைகட்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்றப்பட்டது. இதனால் கூழாங்குளம் ,புதுவெளி ஆகிய இரு கிராமங்களில் இரு ஆரம்பப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
புதுவெளிப்பாடசாலை புதுவெளியின் முகவாயிலில் உள்ள முன்hபள்ளிக் கட்டிடத்தில் அதிபர் உட்பட 2 ஆசிரியர்களுடன் இயங்கி வருகின்றது. இப் பாடசாலையில் தரம் 01 முதல் 03 வரை வகுப்புக்கள் உள்ளன. ஆனால் தேவைக்கு ஏற்ப கட்டிட வசதியின்மை ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது.அடைக்கப்பட்ட தனித்தனி வகுப்பறை கொண்ட கட்டிடம் உடனடியாக தேவைப்படுகிறது.
பாடசாலை அதிபர் பசீர் ஜவாத்; அவர்கள் சிறப்பான முறையில் பாடசாலையை கொண்டு செல்ல முயற்சிகளைச் செய்துவருகிறார்.ஆகவே கட்டிடத் தேவையை மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் அவர்களும் மாகாணக் கல்வி அமைச்சர் ,குருகுல ராஜா அவர்களும் , பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்களும் ,அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுவெளி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Post a Comment