Header Ads



வருமானம் குறைந்த உள்ளுராட்சி சபைகளை வசதிகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டம்


(ஜே.எம்.வஸீர்)

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வருமானம் குறைந்த உள்ளுராட்சி சபைகளை இனங்கண்டு அவற்றிற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை  அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தின் கீழ் தொடங்கொட பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இத்திட்டதிற்காக 50 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதுடன் இத்திட்டத்தில் மொத்தமாக 110 வருமாணம் குறைந்த உள்ளூராட்சி சபைகள் இனங்காணப்பட்டு அதனுள் 30வது இடத்திலுள்ள சபையாக தொடங்கொட பிரதேச சபை காணப்படுகின்றது. நிருவாக கட்டிட வேலைத்திட்டம் 2015 ஏப்;ரல் மாதம் நிறைவு பெறவுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர் குமார வெல்கம, தொடங்கொட பிரதேச சபையின் தலைவர் ஜகத் கீர்த்தி பெரேரா மற்றும் புறநெகும செயற்றிட்டத்தின் பணிப்பாளர் ஆனந்த கமகே அமைச்சின் உயர் அதிகாரிகளும்; ஊழியர்களும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். 


No comments

Powered by Blogger.